Maduravoyal To Harbour Bridge Project : மதுரவாயல் - துறைமுக பாலம் திட்ட பணிகள் தற்போது தீவிர வேகத்தில் தொடங்கப்பட்டு உள்ளது

Maduravoyal To Harbour Bridge Project - 14 ஆண்டுகளாக முடங்கி கிடந்த பிரம்மாண்ட திட்டம் :

சென்னையில் தற்போது பல்வேறு பகுதிகளில் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலைகள் சரி செய்யப்பட்டு புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன. சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை பாலம் கட்டுவதற்கான பணிகள் நடக்க உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரவாயல் – துறைமுகம் பாலம் திட்டம் (Maduravoyal To Harbour Bridge Project) தொடங்கப்பட்டு உள்ளது. 14 ஆண்டுகளாக முடங்கி இருந்த மதுரவாயல் – துறைமுக பாலம் திட்ட பணிகள் தற்போது தீவிர வேகத்தில் சென்று கொண்டு இருக்கின்றது. இதற்கான டெண்டர் விடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து  கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 2009ல் இந்த திட்டம் அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைத்து துறைமுகத்திற்கு கூடுதல் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வைத்து, வருமானத்தை பெருக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டம் (Maduravoyal To Harbour Bridge Project) ஆனது கருணாநிதியின் கனவு திட்டமாக இருந்தது. ஆனால் 14 வருடங்களாக இந்த திட்டம் முடக்கப்பட்டு இருந்தது. கூவத்தின் மீது இந்த மதுரவாயல் – துறைமுக பாலம் கட்டுவது சுற்றுசூழலை பாதிக்கும் என்று கூறி இந்த திட்டம் முடக்கப்பட்டு இருந்தது. 2011ல் நிறுத்தப்பட்ட இந்த மதுரவாயல் – துறைமுக பால திட்டம் 2022 வரை தொடங்கப்படாமல் இருந்தது. இந்த மதுரவாயல் – துறைமுக பாலத்தின்  தூண்கள் வெறும் போஸ்டர்கள் மட்டும் ஒட்டும் இடங்களாக காட்சி அளித்து கொண்டு இருந்தது. அந்த சாலையில் எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே கட்டப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு இங்கு புதிதாக மொத்தமாக கட்டுமானம் தொடங்க தமிழ்நாடு அரசு இந்த ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த மதுரவாயல் பாலம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

J Kumar Infraprojects என்ற நிறுவனம் இதற்கான (Maduravoyal To Harbour Bridge Project) டெண்டரை வென்றுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே டெண்டர் 1, 2, 4 ஆகியவற்றை கைப்பற்றி உள்ளது. தற்போது இந்த நிறுவனம் டெண்டர் 4ஐயம் கைப்பற்றி உள்ளது. இந்த திட்டத்தில் 9.7கிமீ இரண்டாம் கட்ட சாலைக்கான கட்டுமானத்திற்கான டெண்டர்களை இந்த J Kumar Infraprojects நிறுவனம் வென்றுள்ளது. இதனால் தற்போது J Kumar Infraprojects நிறுவனம் பணிகளை தொடங்கி உள்ளது. அவர்களுக்கு 910 நாள் கட்டுமான காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான கட்டுமான மதிப்பீடு ரூ.3608.94 என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கே பாலம் (Maduravoyal To Harbour Bridge Project) கட்டும் பணிகள் ஆனது வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது .

Latest Slideshows

Leave a Reply