Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் (Magalir Urimai Thogai) நேற்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் இனி விண்ணப்பிக்க முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. அதைப் பற்றி தற்போது காணலாம்.

Magalir Urimai Thogai :

மாதந்தோறும் இல்லத்தரசிகள் ரூ.1000 வழங்கும் ‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ (Magalir Urimai Thogai) முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், பல்வேறு பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு பணம் எடுப்பதற்கான வங்கி டெபிட் கார்டுகளை அமைச்சர்கள் வழங்கினார்கள். பட்ஜெட்டில் ஆண்டு சுமார் ரூ.12 ஆயிரம் கோடி வரை ஒதுக்கப்படும் அளவிற்கு மிகப்பெரிய திட்டமாக இது இருக்கும்.

1 கோடிக்கும் மேலான பயனாளிகள் :

இத்திட்டத்திற்கு மொத்தம் 1 கோடியே 60 லட்சம் பயனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், இந்த திட்டத்தில் சேர பல்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இருந்தன. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது, சொந்தமாக கார் வைத்திருக்கக் கூடாது, 5 ஏக்கருக்கு மேல் நன்செய், 10 ஏக்கர் புன்செய் நிலம் வைத்திருக்கக் கூடாது போன்ற விதிமுறைகள் இருந்தன. இதைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் முறையாக சரிபார்க்கப்பட்டு, இத்திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் அவர்களது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில், நேற்று அனைத்து பயனாளிகளின் கணக்குகளிலும் முழுத் தொகையும் செலுத்திவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தவிர, இனி ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அனைத்து பயனாளிகளுக்கும் ரூ.1000 வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் :

அரசு மற்றும் அரசுப் பணிகளில் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது தவிர ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள குடும்பங்கள், கார் மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள், ஆண்டுக்கு 3,600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களும் விதிகளின்படி நிராகரிக்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த மெசேஜ் அவர்களின் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள நம்பருக்கு வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அனுப்பப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அந்தச் மெசேஜில் அவர்களின் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான விளக்கம் இருக்கும் என்றும், மேலும் அதற்கு தகுந்த பதில் அளித்து மேல் முறையீடும் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி விண்ணப்பிக்க முடியுமா? :

இந்த திட்டத்தில் இணைய ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை முதற்கட்ட முகாமும், ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாமும் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இத்திட்டம் முழுவதுமாக செயல்பட தொடங்கிவிட்டது. இதில், மேலும் சிலர் விண்ணப்பிக்கத் தவறியதாகத் தெரிகிறது. அவர்கள் இத்திட்டத்தில் சேர ஏதேனும் வழிகள் உள்ளதா, புதிய ரேஷன் கார்டு பெறும் வீட்டுத் தலைவிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் எதுவும் இதுவரை வரவில்லை. இது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே பயனாளிகள் அடுத்தகட்ட நடவடிக்கையில் சேர்க்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் :

Magalir Urimai Thogai : இத்திட்டத்தை துவக்கி வைத்து ஸ்டாலின் பேசுகையில், ‘‘பெண்களுக்கு எத்தனை ஆண்டுகள் உரிமை கிடைக்கிறதோ, அத்தனை ஆண்டும் இந்த ஸ்டாலின் தான் ஆட்சி செய்வார் என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கூறுகிறார். எனவே, இத்திட்டம் தொடர்ந்து செயல்படும் என பலர் நம்புகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது X தளத்தில், “நாட்டுக்கு முன்னோடியான திட்டங்களை செயல்படுத்தி திராவிட மாடலில் தமிழகத்தை பெருமைப்படுத்துகிறோம். காலை உணவு திட்டம் மாணவர்களின் வருகையை அதிகரித்து, கற்றல் திறனை மேம்படுத்துகிறது. இப்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால், உழைக்கும் மகளிர்களின் கஷ்டங்களை போக்கியுள்ளோம். தாயாகக் கருணையும், மனைவியாக உறுதுணையும், மகளாக பேரன்பையும் பொழியும் மகளிர்க்கு ‘தாயுமானவராகத்’ தமிழ்நாடு அரசு எப்போதும் செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply