Maha Shivaratri 2025 : மகா சிவராத்திரி வரலாறும் கொண்டாட்டமும்

இந்தியாவில் மகா சிவராத்திரி என்பது இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத் திரயோதசி நாளுக்குப் பிறகு வரும் சிவராத்திரி நாளில் (Maha Shivaratri 2025) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் விரதத்துடன், இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுகின்றனர். மேலும் மகா சிவராத்திரி தினத்தன்று சிவ ஆலயம் சென்றால் ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியம் வந்து சேரும் என பல நூல்கள் மகா சிவராத்திரியின் மகிமைகளைப் பற்றி கூறியுள்ளன.

மகா சிவராத்திரியின் வரலாறு

இந்து புராணங்களின்படி மகா சிவராத்திரியை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த மகா சிவராத்திரி நாளில் சிவனும், பார்வதியும் திருமணம் செய்துகொண்டதாக நம்பப்படுகிறது. எனவே இந்த திருமண நாளை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் (Maha Shivaratri 2025) இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. மேலும் மற்றொரு புராணக்கதை சிவராத்திரி என்பது சிவன் மற்றும் சக்தியின் இரவு என்றும் இது சாராம்சத்தில் இந்த உலகை சமநிலைப்படுத்தும் ஆண்பால் மற்றும் பெண்பால் ஆற்றலை குறிப்பதாகவும், பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் இணைந்து கடைந்தபோது கடலில் இருந்து வெளியேறிய ஆலகால விஷத்தை சிவபெருமான் குடித்து உலகை இருளிலிருந்து பாதுகாத்த நாளே மகா சிவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது என்று கூறுகிறது. மேலும் இந்த விஷம் சிவபெருமானின் தொண்டையில் சேமிக்கப்பட்டு நீல நிறமாக மாறியதாகவும், அதனால்தான் சிவன் ‘நீலகண்டர்’ என அழைக்கப்படுவதாகவும் கூறுகிறது.

மகா சிவராத்திரியின் முக்கியத்துவம் (Maha Shivaratri 2025)

Maha Shivaratri 2025 - Platform Tamil

புராணக்கதைகள் சிவராத்திரியின் முக்கியத்துவத்தை வெவ்வேறு விதமாக விவரிக்கின்றன. அவற்றில் ஒன்றின் கூற்றுப்படி இந்த சிவராத்திரி இரவில்தான் சிவன் படைத்தல், பாதுகாத்தல் மற்றும் அழித்தல் என்ற பிரபஞ்ச நடனத்தை நிகழ்த்துவதாக (Maha Shivaratri 2025) கூறுகிறது. மேலும் இந்த சிவராத்திரி இரவில் சிவனை வழிபட்டால் தங்கள் வாழ்க்கையில் செய்த பாவங்களை நீக்கி, வாழ்வில் நேர்மறை மாற்றங்களுக்கு உதவும் என்று மற்றொரு புராணக்கதை கூறுகிறது.

மகா சிவராத்திரி கொண்டாட்டம்

ஒருவரின் மனதை கட்டுப்படுத்தும் மகாவிரதம், மகா சிவராத்திரி விரதமாகும். எனவே இந்த மகா சிவராத்திரியை பக்தியுடன் கொண்டாட வேண்டும். இந்தநாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் மேற்கொண்டு, இரவு முழுவதும் கண்விழித்து ஈசனை முழுமனதுடன் நினைத்து மனமுருகி வழிபட (Maha Shivaratri 2025) வேண்டும். மேலும் இந்து மக்களின் கலாச்சாரத்தில் வாழ்க்கையில் இருளையும் அறியாமையையும் வெல்வதை நினைவு கூறும் புனிதமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply