Maharaja First Look : மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Maharaja First Look :

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படமான மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Maharaja First Look) தற்போது வெளியாகி உள்ளது.

தமிழில் சீனு ராமசாமி இயக்கிய தென்மேக்கு பருக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, தற்போது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, மக்கள் செல்வன் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். ஹீரோவாக நடிக்கும் முன் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, சுந்தரபாண்டியன், நான் மகான் அல்ல ஆகிய படங்களில் துணை நடிகராக இருந்த விஜய் சேதுபதி, தனது தனித்துவமான நடிப்பால் பாலிவுட்டின் உச்சத்தை அடைந்துள்ளார்.

2012ல் வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், பீட்சா ஆகிய படங்கள் விஜய் சேதுபதி உச்சத்துக்கு செல்ல அங்கீகாரத்தை கொடுத்தன. இதே வரிசையில் வெளியான சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்கள் விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்று அறிய வைத்தது. துணை நடிகராக இருந்து ஹீரோவாக மாறி மாஸ் ஹீரோக்களுக்கு கடுப்பான சூப்பர் வில்லனாக தனது நடிப்பின் இன்னொரு முகத்தை காட்டி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். விக்ரம் வேதா, விக்ரம், மாஸ்டர், விடுதலை போன்ற படங்களில் வில்லனாக தன்னை வெளிப்படுத்திய இவர், இந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அட்லி இயக்கிய ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கலக்க ஆரம்பித்துள்ளார் விஜய் சேதுபதி.

தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் 50 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (Maharaja First Look) போஸ்டர் வெளியாகியுள்ளது. குரங்கு பொம்மி படத்தை இயக்கி பாராட்டப்பட்ட நிதிலா சுவாமிநாதன் இயக்கி வரும் திரைப்படம் மகாராஜா ஆகும். இதில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக அனுராக் காஷ்யப் நடிக்கிறார். இந்த படத்தில் மம்தா மோகன் தாஸ், முனிஷ்காந்த், சிங்கம்புலி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் தேவராஜ், அனுபமா, ஜெயச்சந்திரன், ஒற்றன் துரை, ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலையில் மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Maharaja First Look) வெளியாகியுள்ளது. கையில் அரிவாளுடன் அமைதியாக அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதி, உடல் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட இருப்பது போல போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் எப்போதும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தும் விஜய் சேதுபதி, வித்தியாசமான கேரக்டரில் தனது ஸ்டைலில் கலக்கப் போகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply