Maharaja Release Date : மகாராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று காட்டிக் கொள்ளாமல், எந்த கேரக்டர் கிடைத்தாலும் அதை சிறப்பாக கொடுக்கும் நடிகராக விஜய் சேதுபதி காணப்படுகிறார். ஹீரோ மட்டுமின்றி, வில்லன், குணசித்திர வேடங்கள் என பல்வேறு கேரக்டர்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் படத்திலும் திருநங்கையாக நடித்தது தெரிந்தது. அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம் விஜய் சேதுபதி நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ் படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் தற்போது OTT-ல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா தற்போது ரிலீசுக்கு (Maharaja Release Date) தயாராக உள்ளது. இப்படம் மே மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி ஹீரோயிசத்தில் மட்டும் சிக்கிக் கொள்ளாமல், ஹீரோவாகவும், குணச்சித்திர வேடமாகவும், வில்லனாகவும் அடுத்தடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் குறுகிய இடைவெளியில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது அவரது ஐம்பதாவது படமான மகாராஜா ரிலீசுக்கு தயாராக உள்ளது. கடந்த ஆண்டு பாலிவுட்டில் விஜய் சேதுபதி நடித்த ஜவான் மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழ் மற்றும் இந்தியில் வெளியான மெர்ரி கிறிஸ்மஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது.

Maharaja Release Date :

இந்நிலையில் அவரது 50வது படமான மகாராஜா ரிலீசுக்கு தயாராக உள்ளது. பெரிய இயக்குனர்கள் கூட்டணியில் மட்டுமின்றி இளம் இயக்குனர்களுடனும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அந்த வகையில் குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மஹாராஜா படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர் ஏ.எல்.தேனப்பன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இப்படம் மே 16ஆம் தேதி வெளியாக (Maharaja Release Date) உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கிய சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். சலூன் நாற்காலியில் கையில் ரத்தம் தோய்ந்த அரிவாளுடன் விஜய் சேதுபதி அமர்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கலாம்.

Latest Slideshows

Leave a Reply