Maharaja Trailer : மகாராஜா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக விஜய் சேதுபதி திகழ்கிறார். ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களிலும் கலக்கி வருகிறார். பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா ஆகும். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ள படம் மகாராஜா. இந்த படத்தின் ட்ரெய்லர் (Maharaja Trailer) தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் ட்ரெய்லர் எப்படி இருக்கு என்பதை காணலாம்.

மகாராஜா மையக்கருத்து :

சென்னை கே.கே.நகரில் சலூன் கடை நடத்தி வருபவர் விஜய் சேதுபதி. அவர் பெயர் மகாராஜா. திடீரென்று புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு வந்த மகாராஜா, லட்சுமியைக் காணவில்லை என்று கூறுகிறார். இதனால், வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறை அதிகாரி அருள்தாஸிடம் கூறுகிறார். லட்சுமி விஜய் சேதுபதியின் மனைவியா, மகளா அல்லது தங்கையா என்று நினைக்க வைக்கிறது. ட்ரெய்லரில் லட்சுமி ஆள் இல்லை, லட்சுமி என்றால் என்ன? அது பொருளா? அல்லது நபரா? என்பதை தெரிந்துகொள்ள ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

Maharaja Trailer விமர்சனம் :

ட்ரெய்லரின் தொடக்கக் காட்சியில் விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா இருப்பதைக் காட்டுகின்றனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் அப்பாவாக பாரதிராஜா நடிக்கிறாரா? அல்லது வேறு உறவாக வருகிறதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ட்ரெய்லரில் மிகப்பெரிய சம்பவம் மறைந்திருப்பதாக அருள்தாஸ் தனது சக அதிகாரிகளிடம் கூறுகிறார். ட்ரெய்லரின் இறுதிக் காட்சியில் விஜய் சேதுபதி கையில் அரிவாள் மற்றும் காலில் குத்திய கத்தியுடன் ஆவேசமாக வருவதுபோல் காட்டுகின்றனர்.

படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் அனுராக் காஷ்யப் ஒரு காட்சியில் மட்டும் தோன்றுகிறார். படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது, ​​இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அபிராமி, மம்தா மோகன்தாஸ், முனிஷ்காந்த், திவ்யபாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி சாதாரண வேடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். நித்திலன் சாமிநாதனுடன் இணைந்து ராம் முரளி இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply