Mahavir Jayanti Celebration 2025 : மகாவீர் ஜெயந்தி வரலாறும் கொண்டாட்டமும்

மகாவீர் ஜெயந்தி என்பது சமண (ஜைன) சமுதாயத்தின் மிக முக்கியமான பண்டிகையாகும். இது சமண மதத்தின் 24 ஆவது மற்றும் கடைசி தீர்த்தங்கரராகிய மகாவீரரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் (Mahavir Jayanti Celebration 2025) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை, இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள சமண (ஜைன) மக்களால் மகிழ்ச்சியோடும், பக்தியோடும் மற்றும் ஆழ்ந்த மத உணர்வோடும் கொண்டாடப்படுகிறது.

மகாவீரரின் வாழ்க்கை வரலாறு

கி.மு 599-ல் பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி என்ற இடத்தில் ஒரு அரச குடும்பத்தில் மகாவீரர் பிறந்தார். அவருடைய இயற்பெயர் வர்தமான். மகாவீரரின் தந்தை பெயர் சித்தார்த்தர் மற்றும் தாய் ராணி திரிஷாலா. வர்தமானின் குடும்பம் வசுதேவ (Mahavir Jayanti Celebration 2025) குலத்தைச் சேர்ந்தது. சிறுவயதிலிருந்தே மகாவீரர் தவம், தியானம் மற்றும் ஆழ்ந்த சிந்தனையில் ஆர்வம் காட்டி வந்தார். மகாவீரர் தன்னுடைய 30-வது வயதில் இல்லற வாழ்க்கையை விட்டுவிட்டு தவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து 12 ஆண்டுகள் கடுமையான தவம் செய்தார். பிறகு அவருக்கு முழு ஞானம் கிடைத்தது. அதன்பின் அவர் மக்களுக்கு அறம், கருணை, அஹிம்சை, சத்தியம் ஆகிய நெறிகளை போதித்தார்.

மகாவீரரின் போதனைகள் (Mahavir Jayanti Celebration 2025)

மகாவீரர் தனது வாழ்க்கையின் மூலமாகவும், போதனையின் மூலமாகவும் அஹிம்சை (எந்த உயிர்களுக்கும் துன்பம் இழைக்காமை), சத்தியம் (உண்மை), அஸ்தேயா (திருடாமை), பிரம்மச்சரியம் (சொந்த ஆசைகள் இல்லாமை) என்ற நான்கு முக்கிய (Mahavir Jayanti Celebration 2025) போதனைகளை போதித்தார். மகாவீரரின் போதனைகள் அனைத்தும் வாழ்க்கையின் உயர்ந்த நோக்கங்களை கொண்டவை. அவர் மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த கொள்கைகள் தற்போது உலகளாவிய மதங்களில் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் எல்லா உயிரினங்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என சமண மதத்தில் அளிக்கப்பட்ட மரியாதையை தேசத்தந்தை மகாத்மா காந்தி பெரிதும் மதித்தார்.

மகாவீர் ஜெயந்தியின் முக்கியத்துவம்

Mahavir Jayanti Celebration 2025 - Platform Tamil

மகாவீர் ஜெயந்தி என்பது மகாவீரரின் பிறந்தநாளை நினைவுகூரும் நாளாகும். இது சமண (ஜைன) சமூகத்திற்கு  மட்டுமல்லாமல், அனைத்து மதத்தினருக்கும் ஒரு ஒளிவிளக்காக இருக்கிறது. மகாவீரர் பரப்பிய உண்மை, ஒழுக்கம் மற்றும் அஹிம்சையின் மதிப்பு இந்த நாளில் மீண்டும் மீண்டும் (Mahavir Jayanti Celebration 2025) நினைவு கூரப்படுகின்றன. இந்த நாளில் சமணர்கள் சமண கோவில்களில் வைக்கப்பட்டுள்ள மகாவீரரின் உருவத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்து அவரின் போதனைகளை மீண்டும் உள்வாங்குகிறார்கள். சிலர் சமுதாய சேவைகளில் ஈடுபடுகிறார்கள், மற்றும் நன்னெறி வாழ்வைப் பற்றிய புத்தகங்களைப் பகிர்கிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply