Major League Cricket: அமெரிக்காவில் முதல் புதிய T20 லீக் போட்டி!

அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் என்னும் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது. இந்த மாதம் 31ம் தேதி வரை நடைபெறும்.

அமெரிக்க மேஜர் கிரிக்கெட் லீக்

அமெரிக்க நாட்டில் கிரிக்கெட் என்னும் விளையாட்டு அவ்வளவு பெரிதாக கொண்டாடப்படவில்லை. இதனால் அந்த நாட்டில் கிரிக்கெட்டை விளம்பரப்படுத்தும் விதமாக அனைத்து வருடம் டி20 கிரிக்கெட் தொடர் ஐபிஎல் ஐ போன்று அங்கும் நடைபெற்று வருகிறது. அமெரிக்க மேஜரில் என்னும் பெயரில் அந்தத் தொடர் நடைபெற உள்ளது. மொத்தமாக ஆறு அணியுடன் களமிறங்க உள்ளது.

ஐபிஎல் சேர்ந்த மும்பை டெல்லி சென்னை கொல்கத்தா போன்ற உரிமையாளர்களே அந்த அணிகளையும் நடத்தி வருகின்றன. சென்னை அணி நிர்வாகம் தங்களுடைய அணிக்கு டெக்சாஸ் எனவும் மும்பை அணியின் நிர்வாகம் நியூயார்க் அணியும் வாங்கியுள்ளது. ஐபிஎல்லில் ஆடும் அணிகளை போன்று இந்த அணிகளுக்கும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், நியூயார்க் இந்தியன்ஸ், என பெயர் வைத்துள்ளது.

Major League Cricket - 6 அணிகள்

டெக்ஸாஸ் அணிக்கு டூ பிளசிஸ் அவர்களும் மும்பை அணிக்கு நட்சத்திர வீரர் பொல்லார்ட் அவர்களும் தலைமை தாங்குகின்றனர். கொல்கத்தா அணி தங்களின் கேப்டனாக சுனில் நரையினை நியமித்துள்ளது. இந்த நிலையில் ஆறு அணிகளுடன் கோலாகலமாக தொடங்க உள்ள இந்த லீக் நாளை ஆரம்பிக்க உள்ளது. இதன் மூலம் ஆறு அணி கேப்டன்களும் கோப்பையுடன் இருக்கும்  புகைப்படத்தை தங்கள் முகநூலில் பதிவிட்டுள்ளனர். மேலும் அந்தத் தொடரின் அட்டவணையையும் தற்போது வெளியிட்டுள்ளனர். மொத்தமாக 19 ஆட்டங்கள் நடைபெறும். இவற்றில் லீக் போட்டிகள் 15 மற்றும் பிளே ஆப் போட்டிகள் மூன்றும் பைனல் ஒரு போட்டிகளும் குறிப்பிடத்தக்கது.

இந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரை போன்று மைனர் லீக் கிரிக்கெட் தொடரும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தங்கள் நாட்டுக்குள்ளாகவே உள்ள வீரர்கள் இளைஞர்களின் திறமையை கண்டறிவதற்காக இது நடத்தப்பட்டு வருகிறது.

Latest Slideshows

Leave a Reply