Makkaludan Mudhalvar Scheme New Announcement : புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் (Makkaludan Mudhalvar Scheme New Announcement) செயல்தலைவர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் பேசியதாவது :

‘மக்களுடன் முதல்வர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், டிஎன்பிஎஸ்சி தேர்வில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 10,000 பணியிடங்கள் ஜூன் மாதத்துக்குள் நிரப்பப்படும் என்றும், அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 50,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் செயல்தலைவர் ஸ்டாலின் (Makkaludan Mudhalvar Scheme New Announcement) அறிவித்துள்ளார். திட்டத்தில் முதற்கட்டமாக, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகரின் புறநகரை ஒட்டியுள்ள கிராம பஞ்சாயத்துகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டன. இரண்டாம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் கிராமப்புறங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்களை முதலில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். அதன் பிறகு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புகிறார்கள். வெறும் முப்பது நாட்களில், இந்த நடவடிக்கைகளின் மூலமாக, 3 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது என்று நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகப்பெரிய எண்ணிக்கை.

கூட்டுறவுத்துறை மூலம் ரூ.6 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 766 பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 ஆயிரத்து 659 பேருக்கு ரூ.10 கோடி மதிப்பில் 3 சக்கர வாகனங்கள்/கடன் உதவிகள்/ கருவிகள்/ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் ஆயிரத்து 190 பேருக்கு 60 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் 53 ஆயிரத்து 705 பேருக்கு வரிவிதிப்பு/குடிநீர்/கழிவுநீர் இணைப்பு/கட்டட அனுமதி/ பிறப்பு இறப்பு பதிவு போன்றவற்றை செய்து தரப்பட்டுள்ளது.

மின்சார வாரியத்தில், 26 ஆயிரத்து 383 பேருக்கு புதிய மின் இணைப்புகள்/பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருவாய்த்துறையில் 18 ஆயிரத்து 236 பேருக்கு 42 ஆயிரத்து 962 இடமாறுதல் மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் முப்பது நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணை (Makkaludan Mudhalvar Scheme New Announcement) வழங்கியுள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், பல்வேறு புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

Makkaludan Mudhalvar Scheme New Announcement - புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் :

இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசு வேலை நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்கள் மூலம் 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று 1,598 பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. நியமிக்கப்பட்டவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பணி ஆணை பெற்ற இளைஞர்கள், உங்களை நாடி வரும் பொதுமக்களிடம், அரசின் சட்ட வரையறைக்குள் தங்களின் குறைகளை நீக்க முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும் இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply