Man Of The Tournament : தொடர் நாயகன் விருது | விராட் கோலி அபாரம்

அகமதாபாத் :

Man Of The Tournament : சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக ஆட்டநாயகன் விருது வென்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி (Man Of The Tournament) முறியடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சச்சின் டெண்டுல்கர் அறிவித்தபோது, அவரது சாதனையை முறியடிக்க வாய்ப்பில்லை என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இது குறித்து சச்சின் டெண்டுல்கரிடம் கேட்டபோது, சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன. என்னுடைய சாதனைகள் நிச்சயம் ஒரு நாள் முறியடிக்கப்படும். ஆனால் எனது சாதனைகளை இந்திய வீரர்களால் முறியடிக்க வேண்டும் என்பதே ஆசை என்றார்.

Man Of The Tournament - விராட் கோலி :

சச்சின் சொன்னது போலவே இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Man Of The Tournament) ஒவ்வொரு சாதனையையும் முறியடித்து வருகிறார். சமீபத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி, உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மட்டும் விராட் கோலி 3 சதங்கள், 6 அரைசதங்கள் என மொத்தம் 765 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் உலக கோப்பை தொடரில் விராட் கோலி தொடர் நாயகன் விருதை (Man Of The Tournament) வென்றார். ஏற்கனவே 2 டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்ற விராட் கோலி, ஐசிசி தொடரில் மூன்றாவது முறையாக தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்தார்.

இந்த நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இதுவரை 183 சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், 20 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். அதேபோல், 157 சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடியுள்ள விராட் கோலி, 21வது முறையாக தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 21 முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். உலகக் கோப்பை தொடரில் தோல்வியடைந்தாலும், விராட் கோலியின் பல சாதனைகள் அவரது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply