Manapokkuthan Ellame Book Review : மனப்போக்குதான் எல்லாமே
ஜெப் கெல்லர் எழுதிய மனப்போக்குதான் எல்லாமே (Attitude Is Everything) என்ற நூலானது நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய எண்ணங்களைச் சொல்லிக் கொடுக்கிறது. மனப்போக்கை மாற்றுங்கள், வாழ்க்கையை மாற்றுங்கள் என்ற முழக்கத்துடன் வெளிவந்துள்ள இந்நூல், நமது எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட்டு, உங்கள் மீதுள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. இந்த புத்தகத்தை எழுதிய ஜெப் கெல்லர், வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், அவர் ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராக ஆனார். இடையில் கெல்லர் 4 வருடங்களாக பல புத்தகங்களையும், குறிப்புகளையும் சேகரித்து தனது அனுபவத்தின் மூலம் பேச்சாளராக மாறியுள்ளார். நாம் அனைவரும் துன்பத்தை வெறுக்கிறோம். அது நமக்கு உதவி செய்வதில்லை என்று சொல்கிறோம். ஆனால் துன்பம் நமக்கு உதவுகிறது என்று கெல்லர் கூறுகிறார்.
அது எவ்வாறு நமக்கு உதவுகிறது என்பதை விரிவாக விளக்கியுள்ளார். உதாரணமாக, துன்பம் நமக்கு புதிய கண்ணோட்டத்தை அளிக்கிறது, நன்றியுணர்வை அளிக்கிறது, மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துகிறது மற்றும் மதிப்புமிக்க பாடங்களை நமக்கு கற்பிக்கிறது. சுய மதிப்பை வளர்கின்றன என்று துன்பங்கள் பற்றிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் கெல்லர். நீங்கள் நேர்மறையாளராக இருந்தாலும் சரி எதிர்மறையாளராக இருந்தாலும் சரி இந்த புத்தகம் உங்களுக்கு உதவும். நீங்கள் எதிர்மறையாளர் எனில் நேர்மறையான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் வாழ்க்கையில் நம்புவதற்குரிய முன்னேற்றத்தை அடையவும் இந்த நூலைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஏற்கனவே நேர்மறையாக இருந்தால், இன்னும் கூடுதலான வெற்றியையும், திருப்தியையும் அடைய இந்தப் புத்தகம் (Manapokkuthan Ellame Book Review) உதவும்.
Manapokkuthan Ellame Book Review :
இந்த புத்தகமானது (மனப்போக்குதான் எல்லாமே) மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாசகர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் அதைப் படித்து தெரிந்து கொள்ள முடியும். முதல் பகுதி, வெற்றி மனதில் தொடங்குகிறது, மனநிலையின் சக்தி மற்றும் உங்கள் நம்பிக்கைகள் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கும் என்பதைப் பற்றி பேசுகிறது. தனிப்பட்ட வெற்றி உங்கள் சிந்தனை செயல்முறையைப் பொறுத்தது என்பதை இந்தப் பகுதி விளக்குகிறது.
இரண்டாவது பகுதி, நீங்கள் பேசுகிற விதத்தில் கவனம் செலுத்துகிறது. உங்களுடைய மனப்போக்கு எவ்வாறு வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது என்பதையும் மற்றும் நேர்மறையான வார்த்தைகள் உங்கள் இலக்குகளை எவ்வாறு இயக்கும் என்பதையும் கெல்லர் இதில் குறிப்பிட்டுள்ளார். செயலில் இறங்குபவர்களுக்கு பிரபஞ்சம் உதவுகிறது என்ற மூன்றாம் பகுதி, நீங்கள் நேர்மறையாகச் சிந்தித்தாலும், நேர்மறையாகப் பேசினாலும், நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் உங்கள் கனவுகளை நனவாக்க முடியாது என்று விளக்குகிறார். வெற்றி தேவதை தானாக வந்து உங்கள் முன் மண்டியிடுவாள் என்று எதிர்பார்க்க முடியாது. உங்களுடைய கனவை நனவாக்க தேவையான செயல்களை பற்றி கெல்லர் குறிப்பிட்டுள்ளார்.
மனப்போக்கு பற்றி கெல்லர் கூறுவது :
மனப்போக்கு பற்றி கெல்லர் விளக்கியுள்ள கெல்லரின் அணுகுமுறை பாராட்டத்தக்கது. அவற்றை பின்வருமாறு கூறுகிறார். எதிர்மறையான அணுகுமுறை கொண்ட ஒரு நபர் என்னால் முடியாது என்று நினைக்கிறார். நேர்மறையான எண்ணம் கொண்ட ஒரு நபர் என்னால் முடியும் என்று நினைக்கிறார். எதிர்மறை எண்ணம் கொண்ட ஒரு நபர் பிரச்சனைகளில் வாழ்கிறார். நேர்மறையான எண்ணம் கொண்ட ஒரு நபர் தீர்வுகளில் கவனம் செலுத்துகிறார். இவ்வாறு பல உதாரணங்களை கெல்லர் இப்புத்தகத்தில் கூறியுள்ளார். இந்த புத்தகம் மக்களுக்கு மிகவும் பொதுவான அச்சங்களைப் பற்றி பேசுகிறது. பெரும்பாலான பயங்களில் முதலிடம் வகிப்பது பலர் முன்னிலையில் பேசுவது, யோசனைகள் அல்லது கருத்துக்களை நிராகரிப்பது, சொந்தத் தொழிலைத் தொடங்குவது, தோல்வி பயம், உயர் அதிகாரிகளிடம் பேசுவது போன்றவைதான் பெரும்பாலான அச்சங்கள்.
இந்நூல் அதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது. நேர்மறை மனப்போக்குடன் செயல்படுவதற்கு இந்த புத்தகமானது உதவுகிறது. பயனடைந்தவர்களின் கதைகளும் இதில் அடங்கும். சுருக்கமாகச் சொன்னால் எண்ணம் போல் வாழ்க்கை என்று வாழ்வதற்கும் எண்ணங்கள் மூலம் வெற்றியை அடைவதற்கும் கெல்லரின் புத்தகம் உதவுகிறது. இந்த புத்தகம் உங்கள் தனிப்பட்ட திறன்களை வளர்க்க உதவுகிறது. இந்த புத்தகத்தில் புத்துணர்ச்சியூட்டும் கூறுகள் உள்ளன. உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் உங்கள் அணுகுமுறையையும், வாழ்க்கையையும் மாற்ற இந்தப் புத்தகத்தை (Manapokkuthan Ellame Book Review) வாசிக்கலாம்.
Latest Slideshows
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்