Mango Fruit Benefits In Tamil : மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மாம்பழம் பல்வேறு வகைகளை கொண்ட ஒரு வெப்பமண்டல பழமாகும். மாம்பழங்களின் சுவை மற்றும் பல ஆரோக்கிய நன்மையின் காரணமாக “பழங்களின் ராஜா” என அழைக்கப்படுகிறது. மேலும் மாம்பழங்களில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. தற்போது இந்த பதிவில் மாம்பழம் சாப்பிடுவதால் (Mango Fruit Benefits In Tamil) கிடைக்கும் பல்வேறு நன்மைகளை பார்க்கலாம்.

மாம்பழத்தின் நன்மைகள் (Mango Fruit Benefits In Tamil)

1. இதய ஆரோக்கியத்திற்கு

மாம்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கும். மேலும் மாம்பழங்களில் மாங்கிஃபெரின் என்ற பாலிஃபீனால் உள்ளது. எனவே மாம்பழம் சாப்பிட்டு வந்தால் (Mango Fruit Benefits In Tamil) இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவுகள் மற்றும் வீக்கத்தை குறைத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

2. கண் ஆரோக்கியத்திற்கு

மாம்பழங்களில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆக்ஸிஜனேற்றியாகும். இந்த பீட்டா கரோட்டினாய்டுகளில் உள்ள லுடீன் கண்களுக்கு பல வழிகளில் உதவுகிறது.

3. தோல் ஆரோக்கியத்திற்கு

மாம்பழங்களில் அதிகளவு வைட்டமின் C உள்ளது. இந்த விட்டமின்கள் கொலாஜனை உற்பத்தி செய்ய தேவைப்படுகிறது. மேலும் இந்த கொலாஜன்கள் சருமத்திற்கு நெகிழ்ச்சி தன்மையை அளித்து தோலில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்க (Mango Fruit Benefits In Tamil) உதவுகிறது. மேலும் மாம்பழ இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு முகத்தில் ஏற்படும் முகப்பருவைக் குணமாக்குவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

4. மலச்சிக்கலை தடுக்கும்

மாம்பழங்களில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் இவை செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் நான்கு வாரங்களுக்கு தினமும் 300 கிராம் மாம்பழம் சாப்பிட்டவர்களுக்கு மலச்சிக்கல் அனுபவங்களில் முன்னேற்றம் கண்டதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.

5. சர்க்கரை நோய் குணமாகும்

கூழ் மற்றும் விதை கர்னல் ஆகியவற்றில் காணப்படும் பாலிஃபீனால்கள் ஏராளமாக மாம்பழத்தில் காணப்படுகின்றன. இவை மனித உடலில் உள்ள செல்களை பாதுகாக்கின்றன. மேலும் நீரிழிவு நோய் வகை 2 மற்றும் புற்றுநோய் போன்ற சிதைவு (Mango Fruit Benefits In Tamil) நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

6. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கோடை காலங்களில் மாம்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். இதற்கு காரணம் மாம்பழங்களில் அதிகமாக பீட்டா கரோட்டீன் மற்றும் காரோட்டினாய்டு உள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரித்து உடலை வலிமைப்படுத்த உதவுகிறது.

Latest Slideshows

Leave a Reply