Mani Ezhilan World Record : மாற்றுத்திறனாளி கவிஞரின் மலைக்கவைக்கும் சாதனை

Mani Ezhilan World Record - கடலுக்கு அடியில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி கவிஞர் மணி எழிலனுக்கு குவியும் பாராட்டு :

அரவிந்த் ஸ்கூபா ஆழ்கடல் பயிற்சி மையம் சார்பில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் ஆனது ஆழ்கடலில் நீச்சல் வீரர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திமிரி எனும் ஊரில் வசிக்கும் கவிஞர் மணி எழிலன் என்பவர் கடலுக்கு அடியில் சென்று சினிமா கதை எழுதி, அதை வெளியிட்டு உலக சாதனை (Mani Ezhilan World Record) ஒன்றை படைத்துள்ளார். கவிஞர் மணி எழிலன் அனைத்து காதலர்களுக்கும், அவரது மனைவி அமுதா மணி எழிலனுக்கும், அவரது மகள்கள் மைத்ரா மற்றும் பவித்ராஸ்ரீ ஆகியோருக்கும் சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியராக இருந்து வரும் மணி எழிலன் வலது கால் இல்லாத ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். மணி எழிலன் தனது மனைவிக்கு காதலை சமர்ப்பிக்கும் வகையில், கடலுக்கு அடியில் சென்று சினிமா கதை எழுதி, வெளியிட்டு உலக சாதனை (Mani Ezhilan World Record) படைத்துள்ளார். மணி எழிலன் தனது அயராத தன்னம்பிக்கையால் பதிப்புலகில் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து செய்து கொண்டே வருகிறார். இந்த தொடர்ந்து செய்யும் சாதனைகளில் ஒன்றாக காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை, நீலாங்கரையில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில், ஸ்கூபா டைவிங் மூலம் 60 அடி ஆழத்தில் (18 மீட்டர்) சென்று, ஒரு சினிமாவுக்கான கதைச் சுருக்கத்தை எழுதியுள்ளார். அதனை மணி எழிலன் உடனே தட்டச்சு செய்து ஒரு புத்தகமாக்கி, அதை ஆழ்கடலிலே வெளியிட்டு சாதனை (Mani Ezhilan World Record) படைத்துள்ளார். இது போன்ற சாதனையை இதுவரை ஸ்கூபா டைவிங்கிலும், பதிப்புலகிலும், எழுத்துலகிலும் எவரும் செய்ததில்லை என கூறப்படுகிறது. இந்த சாதனையை Assist World Records என்ற நிறுவனம் உறுதி செய்து World Record சான்றிதழினை வழங்கியுள்ளது.

சாதனை குறித்து கவிஞர் மணிஎழிலன் உரை :

வங்கக்கடலில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி, புயல் மையம் கொண்டிருப்பதாக தகவல் வரும். அந்த புயலானது சென்னை, ஆந்திரா மற்றும் புதுச்சேரியை கடந்து மிகப்பெரிய சேதத்தை உருவாக்கிய பின், அந்த கடலில் மிகப்பெரிய மாற்றம் அடைந்து அமைதி உண்டாகும். அதைப்போலவே தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் எனும் புயல் மையம் கொண்டு, பல்வேறு மாற்றங்களைச் செய்துவிட்டு போகும்.

அப்படிப்பட்ட ஒரு தேர்தலை மையப்படுத்தி “மையம்” எனும் தலைப்பில் ஒரு திரைப்படத்திற்கான கதையை எழுதியுள்ளேன். இந்த திரைப்படக்கதை ஆனது திரைப்பட உலகில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறக்கூடிய படமாக அமையும். இதைப்போல் ஒரு தேர்தலை தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடத்தினால் மிகப்பெரிய மாற்றம் ஆனது உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தக் கதை ஆனது விரைவில் திரைப்படமாக வெளிவரும். இந்த முயற்சிக்கு முழு உறுதுணையாக இருந்து அரவிந்த் தருண் ஸ்ரீ ஸ்கூபா டைவிங் பயிற்சி அளித்தார் எனக் கூறியுள்ளார். மேலும், கவிஞர் மணி எழிலன் 30,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை கடலுக்கு அடியில் சென்று எடுத்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply