Manjal Veeran First Look: ஈட்டியுடன் பறக்கும் TTF வாசன்

பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் தமிழ் திரையுலகில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளார். இவர் நடிக்கும் ‘மஞ்சள் வீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது வெளியாகியுள்ளது.

உலகம் இப்போது யூடியூபர்களால் சூழப்பட்டுள்ளது. பலர் சேனல்களைத் தொடங்கி, வீடியோக்களை வெளியிடுவதை தங்கள் அன்றாட கடமையாகக் கொண்டுள்ளனர். அதில் புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பிரபலமானவர் தான் டிடிஎஃப் வாசன். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், தொடர்ந்து பைக்கில் பல்வேறு இடங்களுக்குச் சென்று, அதை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

அவரது யூடியூப் சேனலில் ஏராளமான “Subscribers” உள்ளனர். 2k கிட்ஸ்களிடையே சினிமா துறை பிரபலங்களுக்கு இணையாக வலம் வருகிறார். அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் அவ்வளவு கூடுகிறது. கடந்த ஆண்டு வாசனின் பிறந்தநாளை கொண்டாட ஏராளமானோர் தனியார் விடுதியில் குவிந்திருந்தனர். அதைப் பார்த்தவர்கள் அவர் எப்படிப்பட்ட சினிமா பிரபலம் என்று கேள்வி எழுப்பினர்.

அவருக்கு எந்த அளவுக்கு கூட்டம் கூடுக்கிறதோ அதே அளவுக்கு பல சர்ச்சைகள் அவரைச் சூழ்ந்துள்ளன. அவர் மீது சில வழக்குகள் போடப்பட்டுள்ளன. மேலும், அவர் குழந்தைகளை தவறாக வழிநடத்துகிறார் என்று பலர் பேசினர். அதே சமயம் பல சிறுவர்கள் வாசனை கண்டு லட்சக்கணக்கிலான ரூபாய் மதிப்புடைய பைக் மேல் மோகம் கொண்டு வீட்டில் நச்சரிப்பது அப்படியே பைக் வாங்கினாலும் அசுர வேகத்தில் சென்று விபத்தை சந்திப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த சூழலில் தனது ரசிகர்கள் என குறி பலரது புகைப்படங்களை தனது முதுகில் பச்சைக் குத்திக் கொண்டார். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் முழுக்க முழுக்க வாசன் வைரலாகி வந்தார். தொடர்ந்து ரைட் சென்று கொண்டிருந்த அவர் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் சென்றதால் பல வழக்குகள் இவர் மேல் போடப்பட்டது. மேலும், காவல் நிலையத்திற்கு வரும் போது கோட் சூட்டில் ஒரு பாடலுடன் வீடியோ போட்டதும் சர்ச்சையானது. அதேபோல் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது பாதியிலேயே வெளியேறி சென்றார் .

இந்நிலையில் டிடிஎஃப் வாசன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது வாசனின் பிறந்தநாளான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வம் இயக்கும் இப்படத்திற்கு ‘மஞ்சள் வீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பட்ஜெட் பிலிம் கம்பனி என்னும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

வெளியான இந்த போஸ்டரில் 299 கிமீ வேகத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதாக அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் ஈட்டியுடன் புல்லட்டில் பறக்கிறார். மஞ்சள் வீரன் பட போஸ்டரானது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply