Manjummel Boys Box Office Collection : மாஸ் காட்டும் மஞ்சுமெல் பாய்ஸ் | 90 கோடி வசூல்

கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மலையாள படம் “மஞ்சுமெல் பாய்ஸ்” ஆகும். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கேரளாவை விட தமிழகத்தில் இப்படம் ஒரே நாளில் அதிக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான கதையை கொடுத்து வருவதால் மலையாள படங்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். பிரேமம், ஹிருதயம், 2018, மின்னல் முரளி, க்ரூப், ஐயப்பனும் கோஷியும் என பல படங்களை சொல்லிகொண்டே போகலாம். தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட படங்களின் பட்டியலில் தற்போது ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் இணைந்துள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ் :

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் 2006 ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட மலையாளத் திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். கேரளாவின் மஞ்சுமெல் பகுதியில் இருந்து 11 நண்பர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறார்கள். அவர்களில் ஒருவர் அங்கிருந்த குகையில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்துவிட அவருக்கு என்ன ஆனது? அவர் நண்பர்களால் காப்பாற்றப்பட்டாரா? என்பதுதான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் கதையாகும்.

மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி மற்றும் பலர் நடித்துள்ளனர். மலையாளப் படத்தில் 60% தமிழ் பேசப்படுவது மட்டுமல்ல, இந்தப் படத்தின் கதை தமிழ்நாட்டைப் பின்னணியாகக் கொண்டுள்ளதால் நன்றாக ஓடுகிறது. குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலும் இடம்பெற்றது படத்தின் ஹைலைட். இந்தப் படத்தைப் பார்த்த உலக நாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

Manjummel Boys Box Office Collection :

கேரளாவை விட தமிழகத்தில் ஒரே நாளில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ அதிக வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் டப்பிங் செய்யாமல் படம் வெளியானாலும், பல்வேறு தியேட்டர்களில் ஏராளமான காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளன. குறிப்பாக, இப்படம் வெளியான 11வது நாளில் தமிழகத்தில் மட்டும் மூன்றரை கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 5 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் 7 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்த நிலையில், 2வது வார முடிவில் 90 கோடியை (Manjummel Boys Box Office Collection) தாண்டியுள்ளது.

அடுத்த வாரத்தில் 100 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திலும் படத்தின் வசூல் குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் கேட்டபோது, ​​கடந்த வாரமும் இந்த வாரமும் வெளியான எந்த தமிழ்ப் படத்துக்கும் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருவதால், ஸ்கிரீன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply