Mansoor Ali Khan : லோகேஷ் கனகராஜை போருக்கு அழைத்த மன்சூர் அலிகான்

Mansoor Ali Khan :

பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போருக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜை அழைத்து நடிகர் Mansoor Ali Khan போட்ட பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.

90களில் பிரபலமான வில்லனாக இருந்தவர் Mansoor Ali Khan. முதல் படத்திலேயே வீரப்பன் பாத்திரத்தை ஏற்று நடிப்பில் சிறந்து விளங்கினார். அதன்பிறகு பலரையும் வியப்பில் ஆழ்த்திய வில்லத்தனமான நடிப்பால் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இருப்பினும், அவர் தனது வெளிப்படையான பேச்சு மற்றும் நேர்காணல்களின் போது அவர் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றால் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தார். தற்போது பிரபல இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜும் மன்சூர் அலிகானின் ரசிகர் ஆவார். இவர் தனது கைதி படத்தின் கதையை மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விக்ரம் படத்தில் ஒரு நடன பாடலில் Mansoor Ali Khan நடித்தார்.

லியோவில் Mansoor Ali Khan: மன்சூர் அலிகானை பற்றி தொடர்ந்து மேடைகளில் பேசி வந்த லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்யின் லியோ படத்தில் மன்சூருக்கு வாய்ப்பு கொடுத்தார். படத்தில், விஜய்யின் லியோ கேரக்டருக்கான தொடக்க நபராக அவர் தோன்றினார். அதிலும் குறிப்பாக இலையை வைத்து பீப்பி ஊதுவது போன்ற அவரது அறிமுக காட்சியை லோகேஷ் அமைத்திருந்தது திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜிடம் அவர் விடுத்த கோரிக்கைகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “500 கோடி ரூபாய் முதலீடு செய்து, லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு அளித்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு 1000 கோடி ரூபாய் வசூலிக்க கடுமையாக உழைத்து வருகிறோம்”.

என்னுடன் படம் எடுங்கள்: ஆனால் ஒரு அரசியல்வாதி கையெழுத்து போட்டு 10,000 கோடி, 20,000 கோடி ரூபாய் ஆட்சியை போடுகிறான். லோகேஷ் என்னை வைத்து அப்படி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல. அத  வுட்டுட்டு தம்மாத்துண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு. இல்லனா வாங்க பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கித் தரலாம். போருக்குச் செல்வோம், 500 இராணுவ டேங்கர்கள், 500 ஆயுதமேந்திய விமானங்கள் எடுத்துட்டு வாங்கவும். போருக்கு போயி எல்லா இராணுவத் தளத்தையும் அழிப்போம். அப்பாவிங்க சாகுறாங்க. “சும்மா டம்மி துப்பாக்கி, கையில் அட்டக்கத்தியை கையில் குடுத்துட்டு, வாங்க லோகேஷ் போருக்கு போகலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  முன்னதாக மன்சூர் அலிகான் சரக்கு என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply