Mantra MFS 110 Used In Document Registration : 'Mantra MFS 110' கருவியை பயன்படுத்த ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

  • மக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் தமிழக பத்திர பதிவுத்துறையானது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தற்போது பதிவுத்துறை முக்கிய ஏற்பாட்டினை செய்துள்ளது. இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளது.
  • போலி பத்திரப்பதிவை தடுப்பதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களின் மூலம் விண்ணப்பதாரர்களின் விரல் ரேகையை சேமிக்க கூடுதல் அம்சங்களுடன் ‘Mantra MFS 110’ என்ற புதிய விரல் ரேகை (Mantra MFS 110 Used In Document Registration) இன்று முதல் பயன்படுத்தப்படும் என பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களின் மூலம் பத்திரபதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்நிலையில் தற்போது போலி பத்திரப்பதிவை தடுக்கும் நோக்கில் விண்ணப்பதாரர்களின் உண்மை தன்மையை உறுதி செய்வதற்கு சார் பதிவாளர் அலுவலகங்களில் விரல் ரேகை சேமிக்கப்படுகிறது.

Mantra MFS 100 :

ஒரு இடமோ அல்லது நிலமோ பத்திரபதிவுக்கு வரும் போது விற்பவரின் கைரேகையானது முந்தைய பத்திரபதிவின் போது பெறபட்டதுடன் ஒத்துப்போக வேண்டும். இதற்காக ‘Mantra MFS 100’ என்ற விரல் ரேகை கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ‘Mantra MFS 100’ மென்பொருளில் முந்தைய பத்திரப்பதிவில் விற்பவரின் கைரேகை ஒத்துப்போனால் மட்டுமே புதிய பத்திரபதிவானது மேற்கொள்ளப்படும். இதில் ஏதாவது சிறிது வேறுபாடு இருந்தால் தாக்கல் செய்யப்படும் பத்திரம் நிராகரிக்கப்படும். தற்போது இந்த கருவியில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 

Mantra MFS 110 Used In Document Registration :

தமிழகத்தில் இருக்கும் 575 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் இந்த மன்ட்ரே எம்எப்எஸ் 110 (Mantra MFS 110) கருவியை எல்காட் நிறுவனத்தின் மூலம் (Mantra MFS 110 Used In Document Registration) வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பத்திரபதிவு செய்ய வரும் விண்ணப்பதாரர்களை எளிமையாக அடையாளம் காணும் வகையில் ஸ்டார் 2.0 மென்பொருளில் விரல் ரேகை கருவியை பயன்படுத்துவதற்கு ஏற்ப மாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்டார் 2.0 மென்பொருளின்படி ஆவணதாரர்கள் முதலில் இந்த Mantra MFS 110-ல் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.

ஸ்டார் 2.0 மென்பொருளானது ஆதார் தரவுகளை ஒப்பிட்டு பார்த்து சரி அல்லது தவறு என்ற தகவலை நமக்கு தரும். ஆதார் ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல் சரி என்றால் ஆவணதாரரை மீண்டும் ஒருமுறை ‘Mantra MFS 100’ கருவியில் பதிவு செய்ய வேண்டும். தற்போது இந்த நடைமுறையை மாற்றி கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட Mantra MFS 110 கருவியில் விரல் ரேகையை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையானது செப்டம்பர் 21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் (Mantra MFS 110 Used In Document Registration) என பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest Slideshows

Leave a Reply