Manu Saasthiraththai Erikka Vendum Yen? | மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?

நூல் குறிப்பு:

நாம் தினமும் அன்றாட வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். ஆனால், இன்றும் தீராத நோயாக சாதியும் மதமும் மக்களிடம் பரவி காணப்படுகிறது. இந்நோயிர்கான காரணங்களை எளிமையான முறையில் கண்டறிந்து மக்களுக்கு புரியும் வண்ணம் கொண்டு சேர்த்த பகுத்தறிவு பகலவன் என்று தமிழ் மக்களால் போற்றப்பட்ட தந்தை பெரியார் எழுதிய “மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?” என்ற நூலின் விளக்கவுரையை இத்தொகுப்பில் காணலாம்.

நூல் வெளியீடு:

“மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?” என்ற நூல் சமூக பிரதிபலனாக தந்தை பெரியாரல் எழுத பட்ட நூலாகும். இது 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூல் 16 பக்கங்களை கொண்டது.

Manu Saasthiraththai Erikka Vendum Yen? | நூல் விளக்கம்:

இது தமிழகத்தில் சமீப காலத்தில் தோன்றியிருக்கும் சுயமரியாதைக் கிளர்ச்சியின் பிரதிபலனாக இந்து மதத்தை பற்றியும் அதன்னுடன் பிணைந்துள்ள வேதம், சாஸ்திரம், புராணம், தர்மம் மற்றும் வருணம் என்பனவற்றை பற்றி மக்கள் எவ்வகையில் புரிந்து நடக்கின்றனர் என தீவிர ஆராய்ச்சியின் மூலம் தந்தை பெரியார் கண்டறிந்தார்.

இதன் விளைவாக பார்ப்பன ஆதிக்கம் மக்களின் வாழ்வு தரத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை தெளிவாக இதன் மூலம் எடுத்துரைக்கிறார். இது பல தமிழ் பிராமன தலைவர்களை ஆத்திரமடைய செய்தது. மேலும் மனு தர்ம சாஸ்திரத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ் தலைவர்களையும் விமர்சித்துள்ளார்.

இந்நூலில் பெரியார், பார்ப்பனிய அடக்க முறைகளை பற்றியும் பார்ப்பனியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சாமானிய மக்களை எவ்வாறு அவர்களுக்கு ஏற்றார்போல் மூளை சலைவை செய்தனர் என்பதையும் தெளிவாக இந்நூலில் விளக்கியுள்ளார்.

மேலும் பகவத் கீதையில் குறிப்பிட்டு உள்ள மனு தர்ம சாஸ்திரத்தை மேற்கோள் காட்டி பெண் அடிமைத்தனம், ஜாதி பிரிவுகளின் தோற்றம், தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு பிரமணர்கள் கையாண்டனர், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல் பிரமானியத்தோடு எவ்வாறு இருந்தது என பல தகவல்களை எளிமையான வண்ணத்தில் எடுத்துரைத்தார். மேலும், யாரெல்லாம் சூத்திரர்கள் மற்றும் ஏன் பிரமணர்கள் அல்லதா அனைவரும் சூத்திரர்கள் என பெயர் சூட்டப்பட்டனர் என்பதையும் இந்நூலில் தெளிவாக விவரித்துள்ளார்.

ஜாதியின் பேரால் நடந்த கொடுமைகளையும் மற்றும் தண்டனைகளையும் படிக்கும் பொழுதே படிப்போர் முன்பு காட்சிப்படுத்தும் வகையில் விவரித்துள்ளார். உதாரணமாக அதில் சிலவற்றை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்,

  • “சூத்திரர்கள் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமையுடையதாயிருக்கும்“ (அ 8 சு 22) – இதன் பொருள் பிராமணர்கள் அல்லாத மக்கள் வசிக்கும் இடம் செழுமையற்று காணப்படும்.
  • “ஸ்திரீகள் பிராமனரைக் காப்பாற்றும் விஷயத்தில் பொய் சொன்னால் குற்றமில்லை” (அ 8 சு 22) – இதன் பொருள் பெண்கள் பிராமணர்களை காப்பாற்ற பொய்கள் கூறினாலும் தவறில்லை.
  • “சூத்திரன் பிராமனை திட்டினால் அவனது நாக்கை அறுக்க வேண்டும்” (அ 8 சு 270)
  • “சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி பெயரையோ சொல்லித்திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்” (அ 8 சு 271)
  • “சூத்திரன் காலம் முழுவதும் பிராமனையே தொழ வேண்டும்” (அ 10 சு 122)
  • “பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமனரல்லாதவரைக் கொன்றவனுக்கு பாவமில்லை” (அ 8 சு 143)
  • “சூத்திரன் பிராமணப்பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரை தண்டிக்க வேண்டும்”.
  • “அரசன் சூத்திரர்களை பிராமணர்களுக்கும் உயர்ந்த சாதியினருக்கும் பணிவிடை செய்ய சொல்லி கட்டளையிட வேண்டும்” (அ 8 சு 380)
  • “பிராமணன் கூலி கொடமாலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம். ஏனென்றால், அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்” (அ 8 சு 413)
  • “பிராமணன் மூடனானாலும் அவனே மேலான தெய்வம்” (அ 8 சு 455)
  • “சூத்திரன் வீட்டிலிருந்து கேட்காமால் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம்” (அ 11 சு 13)
  • “யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்க கூடாது” (அ 11 சு 20)
  • “பெண்களையும் பிராமனர்களையும் கொல்லுவது குறைந்த பாவமாகும்” (அ 11 சு 66)
  • “ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ அதைத்தான் சூத்திரனைக் கொன்றால் செய்ய வேண்டும்” (அ 11 சு 131)
  • “அதுவும் முடியாவிடில் வருணமந்திரத்தை மூன்று நாள் ஜெபித்தால் போதுமானது” (அ 11 சு 132)

இது போன்ற ஆயிரக்கணக்கான சுலோகங்கள் மனுதர்ம சாஸ்திரத்தில் காணப்படுகின்றன. இது போன்ற மனித மாண்பை மீறி செயல் பட்ட மனு தர்மத்தை மீண்டும் செயல் படுத்த முயற்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆதலால் இதனை பெரியார் விமர்சித்தது மட்டுமல்லாமல் எரிக்கவும் செய்தார். இதனை பற்றி முழு விவரத்தையும் குடி அரசு – கட்டுரையில் தெளிவாக விவரித்துள்ளார்.

இதன் பிறகு பாபாசாகேப் அம்பேத்கர் “மனித உரிமைகளை மறுக்கும் மனு சாஸ்திரத்தை எரிப்போம்!” என்ற கட்டுரையில் விமர்சித்துள்ளார். இதில் மனுவுக்கு உச்சநீதிமன்றத்தில் சிலை நிறுவ வேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. அதனை எதிர்த்து அம்பேத்கர் “மனுவுக்கு சிலை நிறுவினால் அதைத் தாமே முன்னின்று இடிப்பேன்” என கூறினார். இதன் தொகுப்பும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. மனுவை அம்பேத்கர் எதிர்க்க காரணத்தையும் இத்தொகுப்பில் தெளிவாக விவரித்துள்ளார்.

கருத்து:

வரும் காலங்களில் மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் மனுதர்ம சாஸ்திரத்திற்கும் உள்ள வேறுப்பாடுகளை அடுத்த தலைமுறைகளுக்கு எவ்வாறு நாம் எடுத்து செல்ல போகிறோம் என்ற கேள்வி நம்முள் பல பேருக்கு எழலாம்.

தற்போது நடக்கின்ற மனித உரிமை மீறல்கள் பிரச்சனைகளை பார்க்கும் பொழுது “இப்பொழுதெல்லாம் யார் சாதி மற்றும் மதம் பார்க்கிறார்கள்?” என்ற கேள்விக்கு ஐயத்தை ஏற்படுத்தும் வண்ணம் வந்து நிற்கிறது.

Latest Slideshows

This Post Has 16 Comments

  1. Bavadharshini.B

    Literally it’s very useful, especially Manu tharma saasthiram

  2. Shiva Shankari

    மிகவும் அருமையான பதிவு😌🔥

  3. Kecin

    Very useful

  4. தரணி

    ரொம்ப நல்லா சொல்லிருக்கிங்க அண்ணா

  5. Arthee

    Great Article👏

  6. Divina sancia

    🌿nice and informative

  7. Hema

    It is so useful kindly post like news daily

  8. Anu

    Continue this very very useful

Leave a Reply