Marakkuma Nenjam First Look: ஹீரோவான விஜய் டிவி ரக்ஷன்
விஜய் டிவி பிரபலம் ரக்ஷன் ஹீரோவாக நடிக்கும் “மறக்குமா நெஞ்சம்” படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் விஜே ரக்ஷன். ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் அன்பைப் பெற்ற இவர் தற்போது ‘குக் வித் கோமளி’ நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கி வருகிறார். சின்னத்திரையின் மூலம் பிரபலமானதை அடுத்து சமீபத்தில் ரக்ஷன்
சினிமாவிலும் கால்தடம் பதித்தார்.
முதன் முதலில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான மலையாள நடிகர் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்தப் படத்துக்குப் பிறகு “மறக்குமா நெஞ்சம்” படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தை ராக்கோ யோகேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் 90-களில் நடக்கும் ஒரு ஃபீல் குட் பள்ளி நாடகமாக இந்த படம் உருவாகியுள்ளது. அதாவது இந்த படமானது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை சம்மந்தப்பட்ட படமாக இருக்கும். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் ரக்ஷன் பள்ளியில் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தில் ரக்ஷன், நளினா, ஸ்வேதா, ராகுல், ஆஷிகா காதர், தீனா, மெல்வின் டென்னிஸ், நாடாலி லூர்ட்ஸ், துரோனா, அருண் சூரியன், அகிலா, முனீஷ்காந்த், விஸ்வத் வாத்துல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சச்சின் வாரியார் இசைமைத்து பணியாற்றி வருகிறார். ஃபிலியா எண்டர்டெயின்மென்ட் மற்றும் குவியம் மீடியா இணைந்து தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.