Marakkuma Nenjam Movie Review : மறக்குமா நெஞ்சம் படத்தின் திரை விமர்சனம்

விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமான ரக்ஷன், துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது அவர் மறக்குமா நெஞ்சம் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ரகோ.யோகேந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் அக்ஷய் புல்லா கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். ரக்ஷன், தீனா, ஸ்வேதா வேணுகோபால், மலினா, மெல்வின் டென்னிஸ், முனிஷ்காந்த் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சச்சின் வாரியர் இசைமைக்க கோபி துரைசாமி மற்றும் ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் படத்தின் விமர்சனத்தை (Marakkuma Nenjam Movie Review) தற்போது காணலாம்.

படத்தின் மையக்கருத்து :

பள்ளிப் பருவத்தில் கதாநாயகன் ரக்ஷன் கதாநாயகி பிரியதர்ஷினியை ஒருதலையாக காதலித்து வருகிறார். தனது காதலை இப்போ சொல்லிவிடுவேன், நாளை சொல்லிவிடுவேன் என பள்ளி முடியும் வரை பிரியதர்ஷினியிடம் தனது காதலை சொல்லாமலே போய் விடுகிறார் ரக்ஷன். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2008 ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் படித்துவிட்டு வேலைக்கு செல்கின்றனர். தேர்வில் முறைகேடு வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்படுகிறது. 2008ல் எழுதிய தேர்வு செல்லாது, எனவே மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பின், மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத பள்ளிக்கு திரும்புகின்றனர். வேலை, வீடு என எல்லாத்தையும் விட்டு விட்டு மூன்று மாதங்கள் பள்ளியில் படித்துவிட்டு தேர்வு எழுதச் செல்கிறார்கள்.

பள்ளியில் படிக்கும் போது கார்த்திக் (ரக்ஷன்) பிரியதர்ஷினியை (மலினா) காதலிக்கிறான். ஆனால் காதலை சொல்லவில்லை. 10 வருடங்களாக பிரியதர்ஷினியை நினைத்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து மீண்டும் தேர்வு எழுத செல்லும் போது தன் காதலை சொல்ல வேண்டும் என ஹீரோ கார்த்திக் முடிவு செய்கிறார். தாங்கள் படித்த பள்ளிக்கே திரும்பிச் செல்ல வேண்டும் என்ற ஏக்கத்தில் இப்படியொரு அரிய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிரியதர்ஷினியிடம் கார்த்திக் தன் காதலை சொன்னாரா? தேர்வு என்ன ஆனது என்பதே படத்தின் கதையாகும்.

Marakkuma Nenjam Movie Review :

பள்ளிப்படிப்பு முடிந்து 10 ஆண்டுகளாகியும் பிரியதர்ஷினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார் கார்த்திக். ஆனால் அந்த காதல் உணர்வு தியேட்டரில் உள்ளவர்களை ஈர்க்கவில்லை. இவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களாக நடித்ததை விட, வளர்ந்த பிறகு மீண்டும் பள்ளிக்கு வரும்போது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கார்த்திக்கின் நண்பனாக வரும் தீனா கொடுத்த வேலையை சரியாக செய்து ரசிகர்களின் கைதட்டலைப் பெறுகிறார். ரக்ஷனின் நடிப்பில் முன்னேற்றம் தேவை. பள்ளியில் குறும்புகள், சண்டைகள், காதல் போன்றவற்றைக் காட்டினாலும் நம்மை நெகிழ்ச்சி அடையச் செய்யத் தவறிவிடுகிறது.

Marakkuma Nenjam Movie Review : இருப்பினும், இது பள்ளி நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து ஒரு இனிமையான மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. கோபி துரைசாமியின் ஒளிப்பதிவு பள்ளி தொடர்பான காட்சிகளை நன்றாக காட்டுகிறது. சச்சின் வாரியர் இசையில் பாடல்களை விட பின்னணி இசை சிறப்பாக உள்ளது. நாம் எத்தனையோ பள்ளிப் பருவக் காதல் கதைகளைப் பார்த்திருப்போம், இது இன்றைய காலகட்டத்திலிருந்து சற்றே மாறுபட்டு பழைய காதலை புதிய கோணத்தில் சொல்லும் (Marakkuma Nenjam Movie Review) கதையாக உள்ளது.

Latest Slideshows

Leave a Reply