Marathon Championship 2025 : விழுப்புரம் தடகள சங்கம் நடத்தும் தமிழ்நாடு மாரத்தான் சாம்பியன்ஷிப் 2025
மாரத்தான் ஓட்ட பந்தயம் வரலாறு
மாரத்தான் ஓட்ட பந்தயம் என்பது ஒரு நீண்ட தூர பந்தயம் ஆகும். இதன் வரலாறு கி.மு 490-ல் தொடங்கியது. பண்டைய ஏதென்ஸ் நாட்டில் இருந்து 26.2 மைல் தூரத்தில் கிரேக்க மற்றும் பாரசீக ராணுவ வீரர்களுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. இந்த மாரத்தான் போரில் வெறும் பத்தாயிரம் கிரேக்க வீரர்கள் 1 லட்சம் பாரசீக வீரர்களை தோற்கடித்து தங்கள் தாய் நாட்டை பாதுகாத்தனர். இந்த வெற்றி செய்தியை கிரேக்க குடிமக்களுக்கு தெரிவிப்பதற்கு ஃபைடிப்பிடிஸ் (Pheidippides) என்ற சிப்பாயை ராணுவ அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்த ஃபைடிப்பிடிஸ் சிப்பாய் மாரத்தான் போரில் வழியில் எங்கும் நிற்காமல் சுமார் 26.2 மைல் தூரம் ஓடி போரில் கிரேக்க நாடு வெற்றியடைந்த செய்தியை தெரிவித்தார். இவர் ஏதன்ஸ் நகருக்குள் நுழைந்த போது மூச்சு விட முடியாத சூழ்நிலையில் தனது நாட்டு மக்களை பார்த்து நாங்கள் வென்று விட்டோம் என தெரிவித்துவிட்டு அதே இடத்தில் விழுந்து இறந்தார். இவரின் நினைவாக முதன் முதலில் 1896 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் பந்தயம் சேர்க்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில அளவிலான மாரத்தான் ஓட்டம் (Marathon Championship 2025)
விழுப்புரம் மாவட்ட தடகள சங்கம் (Villupuram District Athletic Association) மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் (Tamil Nadu Athletics Association) இணைந்து நடத்தும் தமிழ்நாடு மாநில அளவிளான மாரத்தான் ஓட்டப்பந்தயம் (Marathon Championship 2025) நாளை 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் உள்விளையாட்டு மைதானத்தில் காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 16, 18, 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பரிசுதொகை
அனைத்து பிரிவிலும் முதலில் வரும் 6 நபருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையாக மொத்தம் (Marathon Championship 2025) ரூ.96000 வழங்கப்படுகிறது. மேலும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அனைத்து பிரிவிலும் முதலில் வரும் 50 நபருக்கு டீசர்ட் வழங்கப்படுகிறது.
போட்டியில் பங்குபெற விதிமுறைகள்
இந்த தமிழ்நாடு மாநில அளவிலான மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்கள் முழு உடல் தகுதியை பெற்றிருக்க வேண்டும். மேலும் விழுப்புர மாவட்டத்தில் உள்ள 16, 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நுழைவு கட்டணத்தில் (Marathon Championship 2025) இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் பொதுப்பிரிவினர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.300-ஐ https://tnathleticassociation.com/ என்ற இணையதளத்தில் செலுத்த வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள்
தமிழ்நாடு தடகள சங்க தலைவர் திரு.W.I.தேவாரம் (IPS) அவர்களும், தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் திருமதி.C.லதா அவர்களும், Namma Family Group Founder & Chairman-னும் விழுப்புரம் மாவட்ட தடகள சங்க தலைவருமான திரு.A.பொன்னுசாமி கார்த்திக் (Namma Family Group Of Business) அவர்களும், செயலாளர் திரு.V.மணிவண்ணன் அவர்களும் இணைந்து நடத்தும் இந்த தமிழ்நாடு மாநில அளவிலான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டியில் (Marathon Championship 2025) சிறப்பு விருந்தினர்களாக Dr.பொன் கவுதம சிகாமணி (Member Of Parliament) அவர்களும், விழுப்புர மாவட்ட ஆட்சியர் Dr.பழனி (IAS) அவர்களும், விழுப்புர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.தீபக் சிவாச் (IPS) அவர்களும் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்த உள்ளனர்.
Latest Slideshows
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்
-
Interesting Facts About Honey Bee : தேனீக்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
Flipkart Monumental Sale 2025 : பிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது
-
V Narayanan Appointed As New ISRO Chief : இஸ்ரோவின் 11-வது தலைவராக தமிழக்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்
-
Sandi Keerai Benefits In Tamil : சண்டிக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்