Marburg Virus In African Countries : ஆப்பிரிக்க நாடுகளில் மார்பர்க் வைரஸ்-ன் தீவிர தாக்கம்

சமீப காலங்களில் உலகளவில் கொரோனா, மங்கி பாக்ஸ் எனப் பல வைரஸ் நோய்கள் பரவி பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிதாக Marburg Virus எனப்படும் Bleeding Eye Virus நோய் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதன் பாதிப்புகள் ஆப்பிரிக்க நாடுகளில் (Marburg Virus In African Countries) பரவலாக காணப்படுகிறது. குறிப்பாகக் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மிகவும் ஆபத்தான நோய் என்று உலக சுகாதார அமைப்பு (World Health Organization) அறிவித்துள்ளது. ரூசெட்டஸ் ஏஜிப்டியாகஸ் வௌவால்களில் இந்த வைரஸ் காணப்படுகிறது.

Marburg Virus In African Countries-ன் அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள்

இந்த வைரஸ் தாக்கிய முதல் 21 நாட்களுக்கு பின்பே அறிகுறிகள் (Marburg Virus In African Countries) ஆனது தென்பட தொடங்குகின்றன. அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள். வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவை இந்த வைரஸ் தாக்கிய 3வது நாளில் இருந்து தென்படும். வாந்தி மற்றும் மலத்தில் ரத்தம் வருதல் ஆகியவை 5ம் நாள் முதல் ஆரம்பிக்கும். மேலும் ரத்தம் மூக்கு, கண், காது, வாய் ஆகியவற்றிலிருந்து கசிய தொடங்கும். மேலும், இந்த பாதிப்புகள் ஆனது எட்டு முதல் ஒன்பது நாட்களுக்குப் பிறகும் தீவிரமாக தொடர்ந்தால் ரத்தப் போக்கு காரணமாக உயிரிழப்பும் கூட ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த கொடூர  வைரஸ் நோய்க்கு தடுப்பூசி மருந்துகள் மற்றும் தடுப்பு சிகிச்சைகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுவது இல்லை. நேரடியாக நோயாளியுடன் ஏற்படும் நேரடித் தொடர்பு மூலம் தான் பரவும். குறிப்பாக நோயாளிகளின் உடலிருந்து வெளிப்படும் திரவங்கள், ரத்தம், நோயாளிகள் பயன்படுத்துகின்ற படுக்கை, மற்றும் நோயாளிகளின் உடை ஆகியவற்றின் மூலம் பரவலாக (Marburg Virus In African Countries) தொற்றுகிறது. முதலில் இந்த நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்போருக்கே இந்த வைரஸ் தாக்குகிறது. இந்த வைரஸ் இறந்தவரின் உடலுடன் நேரடி தொடர்பு கொள்பவர்களுக்கு நோய் பரவுகிறது.

இந்த வைரஸ் பாதிப்பால் ருவாண்டா நாட்டில் இதுவரை 15 பேர் இறந்துள்ளனர். இந்த வைரஸ் ஆனது 17 ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடந்த இரண்டு மாதங்களில் (Marburg Virus In African Countries) மட்டும் பரவியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பிரிட்டன் அரசு ஆனது பிரேசில், கென்யா, ருவாண்டா, காங்கோ, உகாண்டா, பொலிவியா உள்ளிட்ட இந்த 15 நாடுகளுக்குச் செல்லும் தங்கள் நாட்டுப் பயணிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply