Margazhi Thingal Team Pleges To Donate Organs : உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த படக்குழுவினர்

Margazhi Thingal Team Pleges To Donate Organs :

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை தொடர்ந்து, ‘மார்கழி திங்கள்’ படக்குழுவினர் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக (Margazhi Thingal Team Pleges To Donate Organs) உறுதியளித்துள்ளனர். உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்ட இயக்குநர் சுசீந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோருக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் M.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார்.

‘மார்கழி திங்கள்’ திரைப்படம் அக்டோபர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து, உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘மார்கழி திங்கள்’ படக்குழுவினர் அவர்களில் உடல் உறுப்புகளை தானம் வழங்குவதாக (Margazhi Thingal Team Pleges To Donate Organs) அறிவித்துள்ளனர். ‘மார்கழி திங்கள்’ படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன், இயக்குநர் மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட 16 பேர் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியனைச் சந்தித்து உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கான படிவங்களை வழங்கினர்.

அவர்களின் படிவங்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் M.சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டு பாராட்டுத் தெரிவிக்கையில், தமிழக முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்துள்ள ‘மார்கழி திங்கள்’ படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பலர் முன் வந்து முன்னுதாரணமாக இருப்பார்கள் என நம்புகிறேன் என்றார். படத்தின் தயாரிப்பாளரும், முன்னணி இயக்குனருமான சுசீந்திரன் கூறும்போது, ​​உடல் உறுப்பு தானம் செய்பவர்களை அரசு கவுரவிக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தது, மக்கள் நலனில் அவருக்கு உள்ள ஆர்வத்தை காட்டுகிறது. இதையடுத்து, ‘மார்கழி திங்கள்’ படக்குழுவைச் சேர்ந்த நாங்கள் உடல் உறுப்புகளை தானம் (Margazhi Thingal Team Pleges To Donate Organs) செய்ய முன் வந்துள்ளோம். எங்களை ஊக்கப்படுத்திய தமிழக முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு எங்களது மனமார்ந்த நன்றி என்று கூறினார்.

இயக்குநர் மனோஜ் பாரதிராஜா பேசுகையில், இது ஒரு நல்ல திட்டம். எங்களுக்குப் பிறகு திரையுலகைச் சேர்ந்த பலர் தங்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வருவார்கள் என்று நம்புகிறேன் என்றார். இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ‘மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் மனோஜ் பாரதிராஜா. மார்கழி திங்கள் அக்டோபர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. புதுமுகங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாரதிராஜாவும், இசைஞானி இளையராஜாவும் 31 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் இணைந்துள்ளனர். இதனிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply