Margazhi Thingal Teaser - மார்கழி திங்கள் படத்தின் டீசர் வெளியீடு

மனோஜ் பாரதிராஜாவின் ‘மார்கழி திங்கள்’ படத்தின் டீசரை (Margazhi Thingal Teaser) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அதன்பிறகு அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈரநிலம், சமுத்திரம், அன்னக்கொடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் சமீபத்தில் சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகராக இருந்த மனோஜ் பாரதிராஜா ‘மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. புது முகங்கள் நடிக்கும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் (Margazhi Thingal Teaser) வெளியாகியுள்ளது.

Margazhi Thingal Teaser :

1.17 நிமிடம் ஓடும் இந்த டீசரில் இரண்டு பள்ளி மாணவர்களை காதலிக்கும் கதையை மையமாக வைத்து டீசர் (Margazhi Thingal Teaser) வெளியாகியுள்ளது. இதில் மூன்றாவது பின்னணி இசையால் இதம் சேர்கிறார் இளையராஜா, மேலும் இவரின் இசையில் பின்னணியில் ஒலிக்கும் கோராஸ் கவனம் ஈர்க்கிறது. பெண் தனது தாத்தாவிடம் காதலை பற்றி கூற போகிறேன் என்று அவளின் காதலனிடம் சொல்கிறாள், அவளுடைய காதலன் அந்த யோசனையை நிராகரித்து, அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவளிடம் சொல்கிறான். கடைசி சில நொடிகளில் அந்த பெண் தன் தாத்தாவிடம் ரகசியத்தை வெளிப்படுத்துகிறாள். இறுதியில் பாரதிராஜா வெளிப்படுத்தும் ரியாக்‌ஷன் காதலுக்கு எதிரியாக இருப்பார் என்பதை உணர்த்துகிறது. டீசர் (Margazhi Thingal Teaser) தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Slideshows

Leave a Reply