Mari Selvaraj Join With Karthi : மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்கும் கார்த்தி

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க (Mari Selvaraj Join With Karthi) இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.   

இயக்குநர் மாரி செல்வராஜ் :

இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் சாதி அரசியல் பற்றிய புதிய விவாதங்களை தொடங்கி வைத்தார். இவரது இயக்கத்தில் வெளியான கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் வெறும் அரசியல் படம் மட்டுமில்லாமல் ஒவ்வொரு சாதாரண மனித உணர்வுகளையும் தனது படங்களின் மூலம் சொல்ல முயற்சித்து வருவதால் இவரை ஒரு கலைஞனாக உயர்த்தி காட்டுகிறது.

இவரது இயக்கத்தில் தற்போது வெளியான வாழை திரைப்படமும் அப்படியான முயற்சியே ஆகும். நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வசூலையும் குவித்து உள்ளது. அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்தியுடன் மாரி செல்வராஜ் இணைய இருப்பதாக பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Mari Selvaraj Join With Karthi :

பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து நல்ல இயக்குநர்களை அடையாளப்படுத்தி வருகிறது. முன்னதாக கார்த்தி நடித்த தேவ், சர்தார் போன்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அடுத்ததாக கார்த்தி நடித்து வரும் சர்தார் 2 படத்தையும் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தயாரிப்பாளர் லக்ஷ்மன் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் எங்களுடைய அடுத்த படம் கார்த்தியுடன் தான். மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இது ஒரு சுவாரசியமான படமாகும். இந்த படத்திற்கான கதை பற்றி பேசும்போதே கார்த்தி பண்ணலாம் என சொன்னார். கார்த்தியின் ஷெட்யூல் பொறுத்து படத்தை தொடங்க இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். கிராமத்து கதை என்றாலே கார்த்தி அதே போன்ற அவதாரம் எடுக்கக்கூடியவர். கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான மெய்யழகன் படத்தில் அபாரமான நடிப்ப வெளிப்படுத்தி உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply