Mariappan Won The Medal : பாராலிம்பிக்கில் 3 வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன்

பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் மூன்றாவது முறையாக பதக்கம் (Mariappan Won The Medal) வென்ற பின்னர் சேலம் திரும்பிய பாராலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Mariappan Won The Medal :

சேலம் மாவட்டம் தீவப்பட்டியை அடுத்துள்ள பெரிய வடக்கம்பட்டி கிராமத்தை சார்ந்த தங்கவேல் மாரியப்பன் கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இதனை அடித்து தற்போது நடைபெற்ற (Paralympic) போட்டியில் உயரம் தாண்டும் பிரிவில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். தமிழக வீரரான மாரியப்பன் தொடர்ந்து மூன்று பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

சொந்த ஊருக்கு திரும்பிய மாரியப்பன் :

இதனைத் தொடர்ந்து பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கு பிறகு முதல் முறையாக சொந்த ஊருக்குத் திரும்பிய மாரியப்பனுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தீவப்பட்டி மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, பாராலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து, மாரியப்பன் தாயார் சரோஜா மற்றும் குடும்பத்தினர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். ஊர் பொதுமக்கள் சார்பாக மாரியப்பனுக்கு பெரிய மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலர்களைத் தூவி வரவேற்பு அளித்தனர். பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் பதக்கத்துடன் ஜீப் மேல் நின்றபடி, தீவப்பட்டியில் இருந்து சொந்த ஊருக்கு மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்றார்.

மாரியப்பனின் செய்தியாளர் சந்திப்பு :

பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவிற்கு மூன்று முறையாக பதக்கம் வென்றது (Mariappan Won The Medal) மகிழ்ச்சி அளிக்கிறது. தனது சொந்த ஊரில் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் அளித்த வரவேற்பு உற்சாகத்தை அளிக்கிறது. இந்த முறை வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில் அடுத்த முறை கண்டிப்பாக தங்கப் பதக்கம் வெல்ல முயற்சி செய்வேன். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடைசி நேரத்தில் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. இதனால் தங்கம் தவறிவிட்டது. அடுத்த முறை நிச்சயம் தவறாது. எனது அடுத்த இலக்கே, உலக தடகளப் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள், ஆசியப் போட்டிகள் ஆகியவற்றில் தங்கம் வெல்வதே இலக்கு என்று பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply