Mark Antony Box Office Collection Day 18 : ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்த மார்க் ஆண்டனி

Mark Antony Box Office Collection Day 18 :

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் கடந்த மாதம் 15ம் தேதி வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மார்க் ஆண்டனிக்கு பாக்ஸ் ஆபிஸில் தரமான ஓப்பனிங் கிடைத்தது. இந்நிலையில் இப்படம் வெளியான 18 நாட்களிலேயே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் (Mark Antony Box Office Collection Day 18) கிளப்பில் இணைந்துள்ளது.

விஷால் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி ஆகும். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுடன் இருவருமே இரட்டை வேடங்களில் நடித்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. டைம் ட்ராவலை பின்னணியாகக் கொண்டு அறிவியல் புனைகதை ஜானரில் இந்தப் படத்தை இயக்கியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். மார்க் ஆண்டனியின் டிரைலர் வெளியான உடனேயே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன்படி கடந்த மாதம் 15ம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் முதல் நாளிலேயே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் (Mark Antony Box Office Collection Day 18) மார்க் ஆண்டனியின் வசூலும் நன்றாகவே இருந்தது.

Mark Antony Box Office Collection Day 18 : ஒரு பக்கா கமர்ஷியல் திரைக்கதையும், எஸ்.ஜே.சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பும் மார்க் ஆண்டனி படத்திற்கு பிரமாண்ட ஓபனிங்கைக் கொடுத்தது. இதனால் முதல் நாளில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்த மார்க் ஆண்டனி, இரண்டாவது நாளில் 12 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில் மார்க் ஆண்டனி தற்போது 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளார். 30 கோடி பட்ஜெட்டில் உருவான மார்க் ஆண்டனி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் செய்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட்டானது. அதேபோல OTT வியாபாரத்திலும் பல கோடி லாபம் பார்த்துள்ளதாம்.

Latest Slideshows

Leave a Reply