Mark Antony Box Office Collection Day 4 : வசூலில் மாஸ் காட்டும் மார்க் ஆண்டனி

Mark Antony Box Office Collection Day 4 :

நடிகர் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் 4 நாட்கள் வசூல் நிலவரம் (Mark Antony Box Office Collection Day 4) தொடர்பான தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில் விஷால் எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா, Y.G.மகேந்திரன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசைமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதையெல்லாம் மிஞ்சும் வகையில் மார்க் ஆண்டனி படத்தின் ட்ரைலர் அமைந்திருந்தது. அதாவது போன் மூலம் டைம் டிராவல் செய்யும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டுள்ளதால் படத்தில் 80’s-களில் நடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதில் அன்றைய காலகட்டத்தில் தனது நடிப்பு, நடனத்தால் ரசிகர்களை கவர்ந்த சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளது. AI தொழில்நுட்பத்தில் அவரது காட்சி படமாக்கப்பட்டிருக்கலாம் என நினைத்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்களில் சில்க் ஸ்மிதா போல இருக்கும் விஷ்ணு பிரியா தான் நடித்துள்ளார் என தெரிய வந்தது.

தியேட்டரில் பிளாஷ்பேக் காட்சிகளும், சில்க் ஸ்மிதா தொடர்பான காட்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி கலகலப்பாகவும் இருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நடிகர் விஷாலை விட எஸ்.ஜே.சூர்யா சிறப்பாக நடித்துள்ளார் என ரசிகர்கள் பாராட்டினர். ஏற்கனவே இதற்கு முன்னாள் தோல்விகளால் துவண்டு கிடந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் விஷாலுக்கு கம்பேக் கொடுக்கும் படமாக மார்க் ஆண்டனி படத்தை கொடுத்துள்ளார். இதனால் திரையரங்குக்கு ரசிகர்கள் படைடெடுத்து வருகின்றனர்.

விஷால் நடித்த படங்கள் இதுவரை ரூ.100 கோடி வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலுக்கு பின்னாடி வந்த சிவகார்திகேயன் அசால்ட்டாக பல சென்சுரி அடித்த நிலையில், மார்க் ஆண்டனி விஷாலையும் ரூ.100 கோடி கிளப் ஹீரோவாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளான (நேற்று) திங்கள்கிழமை மக்கள் அனைவரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்குக்கு படையெடுத்த நிலையில், 4 நாட்களில் ரூ.50 கோடி வசூல் (Mark Antony Box Office Collection Day 4) வேட்டையை மார்க் ஆண்டனி படம் நடத்தியுள்ளது என்கின்றனர். இதுவரை ரூ.55 கோடி வசூலித்துள்ளதாகவும் 2 வது வார முடிவில் கண்டிப்பாக ரூ.100 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply