Mark Antony Producer Gifted A BMW Car : ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW காரை பரிசாக வழங்கிய வினோத்

Mark Antony Producer Gifted A BMW Car :

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி ஆகும். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் விஷாலுக்கு ஒரு பெரிய கம்பேக் கொடுத்துள்ளது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW காரை தயாரிப்பாளர் வினோத் குமார் (Mark Antony Producer Gifted A BMW Car) பரிசளித்துள்ளார். 

விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைகளை தாண்டி மார்க் ஆண்டனி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள அலப்பாறை நகைச்சுவை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் டைம் டிராவல், ஆக்ஷன், காமெடி என அனைத்தையும் கலந்து கொஞ்சம் வெரைட்டியாக உருவாக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு திரையரங்கையே மெய்சிலிர்க்க வைத்துள்ளது. குறிப்பாக இடைவேளை காட்சி, சில்க் ஸ்மிதா வரும் காட்சி என எல்லாவற்றிலும் எஸ்.ஜே.சூர்யா ஹிட் அடித்துள்ளார். இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்திற்கு முதல் நாளில் நல்ல மாஸ் ஓப்பனிங் கிடைத்தது. மார்க் ஆண்டனியின் ட்ரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் படத்தை ரசித்துள்ளனர்.

Mark Antony Producer Gifted A BMW Car : மார்க் ஆண்டனி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முதல் நாளில் 7 முதல் 9 கோடி வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஷாலின் முந்தைய படங்கள் சரியாக போகவில்லை ஆனால் மார்க் ஆண்டனி அதற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு விஷாலுக்கு கம்பேக் கொடுத்துள்ளது. மார்க் ஆண்டனி திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது அக்டோபர் 13 அன்று Amazon Prime இல் வெளியாகி OTT இல் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ‘மார்க் ஆண்டனி’ படத்தின் தயாரிப்பாளர் வினோத், படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு விலை உயர்ந்த சொகுசு காரை (BMW) பரிசாக (Mark Antony Producer Gifted A BMW Car) வழங்கியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் நாயகன்  விஷாலுக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் என்ன பரிசு காத்திருக்கிறது என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply