Mark Antony Trailer : 'மார்க் ஆண்டனி' படத்தின் ட்ரைலர் வெளியீடு

Mark Antony Trailer :

நடிகர் விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ட்ரைலர் (Mark Antony Trailer) வெளியாகியுள்ளது.

‘லத்தி’ படத்திற்கு பிறகு விஷால் தற்போது ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா, AAA படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரித்து வர்மா கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘மார்க் ஆண்டனி’ தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான் இந்தியன் படமாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவேறு தோற்றத்தில் நடித்துள்ளார், இது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என்றும் படக்குழுவினர் முன்பே தெரிவித்திருந்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து ‘மார்க் ஆண்டனி’ டீசரை நடிகர் விஜய் பார்க்க அனுமதி வாங்கி டீசரை காண்பித்தனர். டீசரை பார்த்த விஜய், படக்குழுவினரை பாராட்டினர். அதற்கு நன்றி தெரிவித்த நடிகர் விஷாலிடம், தனது நண்பருக்காக இதை கூட செய்ய மாட்டேனா? என விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ட்ரைலர் (Mark Antony Trailer) நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது படத்தின் ட்ரைலர் (Mark Antony Trailer) வெளியாகியுள்ளது. ட்ரைலரின் ஒவ்வொரு காட்சியும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.

Mark Antony Trailer : ட்ரெய்லரில் முழுக்க முழுக்க நகைச்சுவை, நக்கல், 18+ என போர் அடிக்காமல் வழக்கமான படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு உள்ளது. ட்ரைலர் கார்த்தியின் குரலில் தொடங்குகிறது. இருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் பல கதாபாத்திரங்களில் கலக்கியிருக்கிறார்கள். டைம் ட்ராவலர் திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு கதை அமைந்துள்ளது. நடிகர் விஷால் முதன்முறையாக பான் இந்தியா படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். ட்ரைலரைப் பார்த்த பலரும் இந்த அற்புதமான படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதுடன், விஷாலின் திரையுலக வாழ்க்கையில் இந்தப் படம் மிகவும் புதியது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். கேங்ஸ்டர் ஆக்‌ஷன் படமான இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று (செப்டம்பர் 15) வெளியாகிறது.

Latest Slideshows

Leave a Reply