Maruthi Nagar Police Station Movie Review: மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரை விமர்சனம்

இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள படம் “மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்” இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், மகத், அமித் பார்கவ், ஆரவ், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மணிகந்த் கத்ரி இசைமைத்துள்ளார். இத்திரைப்படம் ஆஹா OTT தளத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை காணலாம்.

கதையின் சுருக்கம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு நாள் இரவு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பணம் மற்றும் அதிகார பலம் கொண்ட ஒரு கும்பலால் மஹத் கொலை செய்யப்படுகிறார். இவரை கொலை செய்தது சுப்பிரமணியம் சிவா மற்றும் அமித் பார்கவ் தான் என்பது சந்தோஷ் பிரதாப் மற்றும் வரலட்சுமி ஆகியோர் உள்ள குழுவுக்கு தெரிய வருகிறது. இதனால் இந்த குழுவையும் கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். அதற்கு போலீஸ் அதிகாரியாக வரும் வரலட்சுமி, மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டு வாங்கி செல்கிறார். அவர்களின் திட்டப்படி காவல் நிலையத்தில் வைத்தே இருவருக்கும் துப்பாக்கிச்சூடு நடக்கிறது. இதில் சுப்பிரமணியம் சிவா கொல்லப்படுகிறார். காயத்துடன் அமித் பார்கவ் உயிருக்கு போடுகிறார்.

ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியது வரலட்சுமி குழுவினர் அல்ல என்பது தெரிய வருகிறது . ஒரு கட்டத்தில் சுப்பிரமணியம் சிவா மற்றும் அமித் பார்கவ் மீது தாக்குதல் நடத்தியது போலீஸ் உயர் அதிகாரியாக வரும் ஆரவ் என்பதை வரலட்சுமி கண்டுபிடிக்கிறார். ஆரவ் இந்த குற்ற சம்பவத்தில் இருந்து வரலட்சுமி குழுவினரை காப்பாற்றவே அப்படி செய்ததாக தெரிகிறது. இவர்களை ஏன் ஆரவ் காப்பாற்ற வேண்டும்? கொலை செய்யப்பட்டவர்களுக்கும் ஆரவிற்கும் என்ன பகை என்பதை க்ரைம் த்ரில்லர் பணியில் விவரிக்கிறது.

விமர்சனம்

க்ரைம் த்ரில்லர் பாணியிலான ஒரு கதையை அழுத்தமில்லாத திரைக்கதையால் சுவாரசியம் குறைவாக கொடுத்துள்ளார் இயக்குனர். மஹத் தொடர்பான பிளாஷ்பேக் காட்சிகள் தவிர மற்ற விசாரணை காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. இந்த படத்தில் பாடல்கள் ஒரு தடையாக இருந்தாலும் பின்னணி இசை சில இடங்களில் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. பொதுவாக க்ரைம் த்ரில்லர் பாணியிலான படங்களில் காட்டப்படும் நடிகர்களின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகள் படம் பார்ப்பவர்களை ஒருவித பதற்றத்திலேயே ஆழ்த்திவிடும். ஆனால் இந்தப் படத்தில் அது இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக வரலட்சுமி கொலை செய்யும் திட்டம் காட்சிகள் படம் பார்ப்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டுகிறது.

Latest Slideshows

Leave a Reply