Maruti Suzuki Expands at Manesar Plant : மானேசர் ஆலையில் மாருதி சுசுகி ஒரு லட்சம் யூனிட்டுகளுக்கு விரிவுபடுத்துகிறது

ஜப்பானின் Suzuki Motor Corporation (SMC)-ன் துணை நிறுவனம் Maruti Suzuki India (MSIL) ஆகும்.  Maruti Suzuki India (MSIL) ஆனது  =ஹரியானா மானேசரில் உள்ள மூன்று உற்பத்தி ஆலைகளில்  செயல்பட்டு வருகிறது. கடந்த 09/04/2024 அன்று Maruti Suzuki அதன் மானேசர் உற்பத்தி மையத்தில் புதிய வாகன அசெம்பிளி லைனை இயக்கியுள்ளது. இந்த புதிய அசெம்பிளி லைன் மூலம் ஆண்டுக்கு 1,00,000 யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த புதிய அசெம்பிளி லைன் ஆனது மானேசரில் உள்ள மூன்று உற்பத்தி ஆலைகளில் தற்போதுள்ள ஆலை-A உடன் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய அசெம்பிளி லைன் மூலம்  ஆண்டுக்கு 100,000 யூனிட்களை உற்பத்தி செய்ய மற்றும் ஆலையின் மொத்த கொள்ளளவை ஆண்டுக்கு 900,000 வாகனங்களாக உயர்த்த Maruti Suzuki முடிவு செய்துள்ளது. ஆலை A உடன் பிப்ரவரி 2007 இல்செயல்படத் தொடங்கிய மாருதி சுசுகி மனேசர் யூனிட் ஆனது அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 2011 இல் ஆலை B மற்றும் 2013 இல் ஆலை C ஆகியவற்றுடன் விரிவாக்கப்பட்டது.

மாருதி சுஸுகியின் மொத்த 3 கோடி உற்பத்தி மைல்கல்லில் மானேசர் யூனிட் 95 லட்சத்திற்கும் மேல் உற்பத்தியில் பங்களித்துள்ளது. இந்த மனேசரில் ஆலையில்  மாருதி ஆனது  Brezza, Ertiga, XL6, Wagon R, Dzire, S-Presso, Ciaz மற்றும் Celerio ஆகிய எட்டு மாடல்களை உற்பத்தி செய்கிறது. இதில் வேகன் ஆர் ஹேட்ச்பேக் மற்றும் பிரெஸ்ஸா போன்றவை அதிகம் விற்பனையாகும் மாடல்கள் ஆகும்.

MSI நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிசாஷி டேகுச்சி உரை :

MSI நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிசாஷி டேகுச்சி, இந்த புதிய வாகன அசெம்பிளி லைன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யவும் வரும் அடுத்த 7-8 ஆண்டுகளில் ஆண்டுக்கு 4 மில்லியன் வாகனங்களின் திறனை இரட்டிப்பாக்க இலக்கு உள்ளது” என்று கூறினார். இந்த தொடக்கம் ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவை செய்வதற்கும் மற்றும் உற்பத்தி செய்யும் ஒட்டுமொத்த திறனை மேம்படுத்துவதற்கும் உதவும் என்றும் அவர் கூறினார்.

Latest Slideshows

Leave a Reply