May 2023 Post Office Job: அஞ்சலகத்தில் வேலைவாய்ப்பு
இந்தியா அஞ்சலகத்தில் திறன் வாய்ந்த கைவினைஞர்கள் ஆட்சேர்ப்பு 2023 -காக நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை இந்தியா போஸ்ட் அறிவித்துள்ளது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. திறமையான கைவினைஞர்களின் ஆட்சேர்ப்பு (பொது மத்திய சேவை, குரூப்-சி , அமைச்சகம் அல்லாத, அரசிதழ் அல்லாத ) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
May 2023 Post Office Job - விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் (indiapost.gov.in) என்ற இணையத்தில் அறிவிப்பை தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் படிவத்தை பதிவிறக்கம் செய்து பரிந்துரைக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட வர்த்தகத்திற்கு விண்ணப்பித்தால் தனித்தனி உறைகளில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். உறையில் பணியின் பெயருடன் மேல் எழுதப்பட்டிருக்க வேண்டும். சீனியர் மேலாளர், அஞ்சல் மோட்டார் சேவை, 134-A’ Sudam Kalu Ahire Marg, World I, மும்பை 1400018 என்ற முகவரிக்கு விண்ணப்பம் ஸ்பீட் போஸ்ட் செய்யப்பட்ட தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
May 2023 Post Office Job - பணியிடங்கள் மற்றும் பதவிகளின் எண்ணிக்கை
* மெக்கானிக் மோட்டார் வாகனம் – 3
* மோட்டார் வாகன எலெக்ட்ரீசியன் – 3
* ஓவியர் – 1
* கொல்லன் – 1
* டைர்மேன் – 1
* வேல்டர் – 1
* டின்ஸ்மித் – 1
May 2023 Post Office Job Qualifications
அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப நிறுவனத்தில் வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக் மோட்டார் வாகனம் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கனரக வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றிக்க வேண்டும்.
வயது: 18 வயது முதல் 30 வயது வரை.
மாத சம்பளம்: ரூ. 19,900 ரூபாய். அரைக்காசா இருந்தாலும் அரசாங்க காசு என்பதை மனதில் வைத்து விண்ணபம் செய்யுங்கள்.