Meiyazhagan Movie Review : மெய்யழகன் திரைப்படத்தின் திரை விமர்சனம்

  • இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, கருணாகரன், ஜெயபிரகாஷ், ராஜ்கிரண், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசைமைத்துள்ளார்.
  • சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. மெய்யழகன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், படத்தின் முழு விமர்சனத்தையும் (Meiyazhagan Movie Review) தற்போது காணலாம்.  

மெய்யழகன் கதைக்களம் :

சொந்தங்களுக்கு நடுவே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் இருந்து சென்னை புறப்படுகிறார் அருள்மொழிவர்மன் (அரவிந்த்சாமி). சில வருடங்களுக்கு பிறகு தனது சித்தப்பாவின் மகள் திருமணத்திற்கு மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தனது சொந்த ஊரை விட்டு பிரிந்து வந்த ஏக்கம் இருந்தாலும், சொந்தபந்தத்தின் மீது ஏற்பட்ட சஞ்சலத்தால், விருப்பமில்லாமல் ஊருக்கு கிளம்பிச் செல்கிறார். திருமணத்திற்கு சென்று தலையை காட்டிவிட்டு இரவோடு இரவாக சென்னைக்கு திரும்புவதே இவரது திட்டமாக இருந்தது. ஆனால் ஊரில் இவருக்காக ஒருவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அப்போது அருள்மொழியுடன் சாதாரணமாக அத்தான் அத்தான் என பேசி சுற்றி வருகிறார் கார்த்தி. ஆனால் அருள்மொழிக்கு கார்த்தியை ஞாபகம் இல்லை. ஞாபகம் இல்லாவிட்டாலும் தெரிந்தபோல் காட்டிக்கொண்டு ஊருக்கு கிளம்பிவிடலாம் என நினைக்கிறார் அருள்மொழி. தஞ்சாவூரின் பழமையான இடங்கள், இருள் சூழ்ந்த சாலை வழி, ஆறுகள் என நீண்ட பயணமாக நீள்கிறது மெய்யழகன் திரைக்கதை.

Meiyazhagan Movie Review :

படத்தின் முதல் பாதியில் அரவிந்த்சாமி மீண்டும் தஞ்சாவூர் கிளம்பி வந்து தனது அத்தை, மாமா என அனைவரையும் சந்தித்து உரையாடுவது என நீளமாக நீள்கிறது. வேறு ஒருவருடன் திருமணமான முறைப்பெண் அரவிந்த்சாமியை யாருக்கும் தெரியாமல் தொட்டுச்செல்வது நெகிழ வைக்கும் காட்சியாக இருக்கிறது. படத்தில் மிகவும் தாமதமாகவே வருகிறார் கார்த்தி. கதையின் நாயகனாக அரவிந்த் சாமி இருந்தாலும் கார்த்தி கதாநாயகனாக முழுமையாக்குக்கிறார். உணர்வுகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்ட ஒரு கதாபாத்திரமாக கார்த்தி இருக்கிறார். தன்னுடைய வரலாற்று பற்றிய புரிதல், பேசவேண்டிய அரசியல் என அனைத்திலும் கார்த்தியின் கதாபாத்திரத்தின் மூலம் நமக்கு வழி நடத்துகிறார் இயக்குநர்.

நிதானமாக செல்லும் படத்தின் இரண்டாம் பாதியில் ஜல்லிக்கட்டு காட்சிகள் நம்முடைய உணர்ச்சிகளை தட்டி எழுப்புகிறது. கடைசி விவசாயி படத்தை சில இடங்களில் நினைவுபடுத்துகிறது. கதாபாத்திரங்களை தவிர்த்து பறவைகள், விலங்குகள், இடம் என அனைத்தையும் வைத்து கதை சொல்லுகிறார். தஞ்சாவூர் படத்திற்கு சரியான கதைக்களமாக அமைந்துள்ளது. ஒரு சில படங்களில் தஞ்சாவூர் என்றால் பெரிய கோவிலை காட்டுவது என இந்த மாதிரியான காட்சிகள் பயன்படுத்தவில்லை. இதில் நாம் பெரிய கோவிலை தூரத்தில் இருந்துதான் பார்க்கிறோம். அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை (Meiyazhagan Movie Review) நன்றாக நடித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply