Merry Christmas 2023 : கிறிஸ்து பிறப்புப் பெருவிழா

Merry Christmas 2023 :

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா (Christmas) ஆனது December 25-ஆம் நாள் (Merry Christmas 2023) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இது இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறிக்கக் கொண்டாடப்படும் திருவிழாவாகும் மற்றும் கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இவ்விழாவை கத்தோலிக்க திருச்சபை இறைக்காட்சி விழா (Epiphany) என்று அழைக்கிறது. குழந்தை இயேசுவைக் காண கிழக்கில் இருந்து ஞானிகள் வந்ததைக் கொண்டாடும் திருநாளின் ஒரு அங்கமாக கிழக்குத் திருச்சபை கிறிஸ்தவர்கள் இயேசு பிறப்பை (December 25-ஆம் நாள்) கொண்டாடினர் (Merry Christmas 2023) என்றும் கருதப்படுகிறது.

இயேசுவின் பிறப்பு யூதர்களுக்கு மட்டுமன்றி உலக மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியும் ஒளியும் கொணர்ந்தது என்பதை வலியுறுத்தும் வகையில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா (Christmas) கிறிஸ்தவ திருச்சபையின் பல பிரிவினரால் கொண்டாடப்படுகிறது. மனிதகுலத்தின் பாவங்களுக்குக் கழுவ கடவுள் மனித வடிவில் உலகில் வந்தார் என்று நம்புவதே கிறிஸ்துமஸ் கொண்டாடுவதன் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் ஏனைய சமயத்தவர்களும் சமய சார்பற்ற விடுமுறையாக கொண்டாடுகின்றனர்.

பல தொழில் நிறுவனங்கள் மற்றும்  விற்பனை நிலையங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை காணலாம். TV மற்றும் Radio போன்றவற்றில் டிசம்பர் மாதத்தில் ஆரம்பம் முதலே கிறிஸ்துமஸ் சிந்தனைகள் கெரொல் இசைகள் என்பனவற்றின் ஒலி ஒளி பரப்பப்படுகின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் காணப்படும் மேற்குலக நாகரிகங்களின் கவர்ச்சி காரணமாகவும் உலகின் பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவத்தின் பரவல் காரணமாகவும் உலகின் பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக கிறிஸ்துமஸ் விடுமுறைகள் விடப்படுவதோடு மட்டுமல்லாமல் பல விழாக்களும் எடுக்கப்படுகின்றன. சமய நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

இந்தியாவில் கிறிஸ்துமஸ் (Christmas) பெருவிழாக் கொண்டாட்டங்கள் :

December 25 கிறிஸ்துமஸ் நாளுக்கு (Merry Christmas 2023) ஒரு கிழமைக்கு முன்னர் கிறித்தவர்கள் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வீட்டில் அலங்கரிப்பதோடு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ஆரப்பிப்பது வழக்கமாகும். கத்தோலிக்கர் இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகள்,  இடையர்கள், ஞானிகள் செரூபங்களை  கிறித்தவர்கள் பொது இடங்களிலும் வீடுகளிலும் காட்சிக்கு வைப்பது வழக்கமாகும். விண்மீன்க்கு அடையாளமாக காகதித்தாலான விண்மீன்களை வீடுகளில்  வண்ண விளக்குக்களால் அலங்கரித்துவைப்பர்.  டிசம்பர் 24ஆம் நாள் நள்ளிரவில் கிறித்தவர்கள் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவர். December 25 கிறிஸ்துமஸ் (Merry Christmas 2023) அன்று கிறித்தவர்கள் வீடுகளில் விருந்து நடைபெறும்.

கிறிஸ்துமஸ் நாளன்று கிறித்தவர்கள் எல்லாரும் புத்துடை அணியும் வழக்கமும் காணப்படுகிறது. நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் கிறித்தவர்கள் செல்வர். கிறித்தவர்கள் December 25 கிறிஸ்துமஸ் அன்று இரவில் வாண வேடிக்கைகள் செய்வர். கிறித்தவர்கள் பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை செய்வர். அப்போது பாடல் குழுவினர் கிறித்தவ  வீடுகளுக்கு அணியாகச் சென்று சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்களை  (Carols) இசைப்பார்கள்.  கிறித்தவ ஆலயங்களில்  கிறிஸ்துமஸ் பஜனை  நடைபெறும். முழு இரவு தியானங்கள், செபக்கூட்டங்கள் என்பற்றில் ஈடுபடுவது வழக்கமாகும். டிசம்பர் 25 காலையில் உணவுகளை பகிர்தலும், விருந்து கொடுத்தலும் பொதுவான வழக்கமாகும். இக்கொண்டாட்டங்களில் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.

இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ்  தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ்  மகிழ்ச்சிப் பாடல் மற்றும் சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும் December 25 கிறிஸ்துமஸ் அன்று கிறித்தவர்களோடு இணைந்து பிற சமயத்தவரும் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவதால் கிறிஸ்துமஸ் ஆனது சமய நல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

Latest Slideshows

This Post Has 2 Comments

  1. Mansi Sharma

    Merry Christmas 2023! The focus on Christ’s birth brings such a deep and meaningful dimension to the holiday season. It’s a beautiful reminder of the origins of Christmas and the values of love, hope, and giving that it represents. This post wonderfully captures the essence of these timeless messages and the spiritual significance of the celebration. It’s always refreshing to reflect on the true meaning of Christmas amidst all the festivities. Thank you for sharing this heartfelt reminder. Wishing everyone peace, joy, and blessings on this special occasion…

  2. Fleming raj

    Mary christmas and Happy new year to all.

Leave a Reply