Message Drafts : WhatsApp ஆனது Message Drafts என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது வாட்ஸ்அப் சேனலில் WhatsApp-ன் முடிக்கப்படாத செய்திகளை நிர்வகிப்பதற்கான Message Drafts வருகிறது என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். இது பயனர்கள் தாங்கள் டைப் செய்ய தொடங்கிய ஆனால் அனுப்ப முடியாமல் மறந்த செய்திகளை எளிதாக கண்டுபிடித்து அதனை முறையாக முடிக்க உதவுகிறது. இந்த Update ஆனது பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், மற்றும் அரைகுறையாக எழுதப்பட்ட செய்திகளைத் தேடும் தொந்தரவைக் குறைக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நம் அனைவருக்கும் தேவையான ஒரு முக்கியமான Update ஆகும்.

WhatsApp பயனர்கள் தாங்கள் டைப் செய்ய தொடங்கி அதை முடிக்க முடியாமல் மற்றும் தொடராமல் விட்டுவிட்டால் WhatsApp இப்போது அதை “Draft” என்கிற லேபிளுடன் காட்டும். பயனர்கள் இதைப்போன்று அனுப்பப்படாத செய்திகளை எளிதாக நிர்வகிக்க Message Drafts உதவும். இந்த அம்சமானது IOS மற்றும் Android இயங்குதளங்களில் வெளிவருகிறது. பயனர்கள் வாட்ஸ்அப்பில் மெசேஜ்ஜை பாதி டைப் செய்துவிட்டு முழுவதும் மெசேஜ்ஜை டைப் செய்து முடிக்காததால் அதை சில நேரங்களில் குறிப்பிட்ட நபருக்கு அனுப்ப மறந்துவிடுவார்கள்.

WhatsApp-ன் முடிக்கப்படாத செய்திகளை நிர்வகிப்பதற்கான Message Drafts வருகிறது

பயனர்கள் வாட்ஸ்அப்பில் இருந்து வெளியே வந்துவிட்டு திரும்ப வாட்ஸ்அப்பில் சென்று பார்க்கும்போது பாதி டைப் செய்திருந்த அனுப்பப்பட வேண்டிய முக்கியமான செய்தி மறக்கும் நிலை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அந்த செய்தியை மீண்டும் டைப் செய்து அனுப்புவதால் பயனர்களின் நேரமும் வீணாகும். இந்த Message Drafts தானாகவே பயனர்களின்  Chat List-ன் டாப்பில் இருக்கும். முழுமையடையாத செய்தியைக் கொண்ட அரட்டை தானாகவே Inbox-ஸின் மேல் பகுதிக்கு நகர்த்தப்பட்டு மற்ற உரையாடல்களில் தொலைந்து போகாமல் இருப்பதை உறுதி செய்கிறது. குழப்பம் இல்லாமல் தொடர்புடைய உரையாடல்களில் பயனர்கள் மீண்டும் கவனம் செலுத்த உதவுகிறது.

எனவே WhatsApp பயனர்கள் கவனக்குறைவு காரணமாகவோ அல்லது வேறு வேலையில் பிஸி ஆகிவிட்டதாலோ பாதியில் WhatsApp விட்டு வந்தபிறகு, பயனர்கள் மீண்டும் அந்த மெசேஜ்ஜை தாங்கள் பாதியில் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் அந்த மெசேஜ்ஜை அனுப்பலாம். மேலும் பயனர்கள் முழுமையற்ற செய்திகளை மிகவும் திறம்பட கையாள இந்த Message Drafts உதவுகிறது.

Latest Slideshows

Leave a Reply