Metaverse இன் எதிர்காலம்

Metaverse

Metaverse என்பது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட online பகுதிகளின் network ஆகும். மெய்நிகர் (virtual) மற்றும் இயற்பியல் (Physical) பகுதிகளை தடையின்றி  பின்னிப்பிணைக்கிறது. இந்த Metaverse-ல் இயற்பியல், பெரிதாக்கப்பட்ட மற்றும் மெய்நிகர் உண்மைகள் தொடர்பு கொள்கின்றன. 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 600 மில்லியன் பயனர்களை  கொண்டிருக்கும்.  இதன் சந்தை மதிப்பு  ஆனது $74.4 பில்லியன் ஆகும்.

கேமிங், ஹெல்த்கேர், கல்வி, சில்லறை வணிகம் மற்றும் நிறுவனம் உட்பட பல்வேறு துறைகளில் இந்த Metaverse-ன் செல்வாக்கு ஆனது பரவியுள்ளது. மேலும் டிஜிட்டல் உலகில் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தை, வேலை செய்யும் விதத்தை மற்றும் விளையாடும் விதத்தை மாற்றியமைக்கும் விதத்தில் தொடர்ந்து வேகமாக உருவாகி வருகிறது. இதுமட்டுமல்லாமல் வேலை, கல்வி, ஷாப்பிங், பொழுதுபோக்கு, சமூக தொடர்புகள், உடற்பயிற்சி மற்றும் உடல்நலம் ஆகியவற்றில் மேம்பட்ட அனுபவங்களைக் கொண்டுவருகிறது.

வேலை மற்றும் கல்வியில் பயன்பாடு

Metaverse ஆனது Work related gatherings, Training Sessions மற்றும் Educational exposure-களுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் virtual meetings மற்றும் collaborative projects நடத்துதல் ஆகியவை ஊக்குவிக்கப்படும். மேலும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் அதிவேகமான கற்றல் அனுபவங்களை பெற முடியும்.

  • மாணவர்கள் வரலாற்று சம்பந்தமான ஆய்வுகளுக்கு
  • மாணவர்கள் உலகளாவிய மெய்நிகர் விரிவுரைகளில் (global virtual lectures) பங்கு பெற
  • மாணவர்கள் பொருத்தமான மெய்நிகர் சூழலில் தங்கள் பயிற்சிகளை மேற்கொள்ள controlled virtual environment-களை வழங்க முடியும்.

Metaverse-ஸில் ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ந்து வருகிறது

சொத்துக்கள் அல்லது நிலத்தின் 3D சுற்றுப்பயணங்கள், மெய்நிகர் நில அடுக்குகளை வாங்குதல், தகவல் மாடலிங் (BIM) மற்றும் புதிய நுகர்வோரை அணுகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. Metaverse-ஸில் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் என்பது ஒரு முதலீட்டாளர் டோக்கன்கள் அல்லது கிரிப்டோகரன்ஸிகளைப் பயன்படுத்தி தங்கள் மெய்நிகர் பண்புகளை வாங்க, விற்க அல்லது வாடகைக்கு எடுக்கக்கூடிய மெய்நிகர் இடங்களாகும்.

மேலும் Virtual Reality, Augmented Reality மற்றும் பிற மேம்படுத்தப்பட்ட இணைய தொழில்நுட்பங்களைக் கொண்டு  யதார்த்தமான வணிக அனுபவத்தை செயல்படுத்தும். மேலும் ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்தும் மற்றும்  மெய்நிகர் நிலம் வாங்குதல்களை அதிகரிக்கும்.