Meteorological Satellite : INSAT - 3DS செயற்கைக்கோள் நேற்று மாலை விண்ணில் செலுத்தப்பட்டது

Meteorological Satellite :

வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறியும் 25 வகையான கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட INSAT-3DS அதிநவீன செயற்கைக்கோள் (Meteorological Satellite) நேற்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ சார்பில் “இன்சாட்” வகை செயற்கை கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வானிலை ஆய்வுக்காக INSAT-3DS எனும் அதிநவீன செயற்கைக் கோளை இஸ்ரோ (Meteorological Satellite) வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து Geosynchronous Satellite Launch Vehicle (GSLV) – எப்14 ராக்கெட் மூலம் நேற்று மாலை 5.35 மணிக்கு இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதற்கான அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு பணி நிறைவு பெற்று உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சினைப் பயன்படுத்தி விண்ணில் சீறிப்பாய்ந்தது. INSAT-3DS என பெயரிடபட்ட இந்த செயற்கைக்கோளில் 2,275 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தபட்டுள்ளன. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை மிக உன்னிப்பாக கண்காணித்து வானிலை தொடர்பான தகவல்களை துல்லியமாக நிகழ் நேரத்தில் வழங்கும். இதன்மூலம் கனமழை, புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே அறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே விண்ணில் செயல்பாட்டில் உள்ள INSAT-3D மற்றும் INSAT-3DR செயற்கைக் கோள்களின் தொடர்ச்சியாக இந்த INSAT-3டிஎஸ் மேம்படுத்தப்பட்ட கருவிகளுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மேலும் தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து வானிலை மற்றும் நீரியல், கடல்சார் தரவுகளைப் பெறுவது மற்றும் வானிலை முன்னறிவிப்பு திறன்களை மேம்படுத்துவது இந்த செயற்கை கோளில் பொருத்தப்பட்ட கருவிகளின் முக்கிய செயல்பாடாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புவி அறிவியல் அமைச்சகத்தின் (MOES) பல்வேறு துறைகளான மத்திய-தர வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் (NCMRWF), தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT), இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD), இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM), இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் (NICOIS) மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்ட வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் வானிலை சேவைகளை வழங்க INSAT-3DS (Meteorological Satellite) செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தும்.

Latest Slideshows

Leave a Reply