Metro In Underwater : இந்தியாவில் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை

Metro In Underwater - கொல்கத்தாவில் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ :

இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை (Metro In Underwater) தொடங்கப்பட உள்ளது.  இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி 06.03.2024 இன்று தொடங்கி வைக்கிறார். மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஆனது கொல்கத்தாவில் இருந்து ஹவுரா பகுதி வரை ஹூக்ளி ஆற்றின் நீருக்கு அடியில் சுரங்கப்பாதை சேவை தொடங்க உள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே இந்த சுரங்கப்பாதைக்குள் மெட்ரோ ரயிலை (Metro In Underwater) இயக்குவதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபேற்றது. லண்டன் மற்றும் பாரிஸ் இடையேயான யூரோஸ்டார் ரயில்கள் சுரங்கப்பாதை வழியாகச் செல்வதைப் போலவே கொல்கத்தாவில் உள்ள இந்த மெட்ரோ சுரங்கப்பாதைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதைகள் பார்ப்பதற்கே மிகவும்  பிரம்மிப்பூட்டும்வகையில் கொல்கத்தாவில் இருந்து ஹவுரா பகுதி வரை ஹூக்ளி ஆற்றின் நீருக்கு அடியில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இந்த சுரங்கப்பாதைகள் கொல்கத்தா நகரத்தின் கிழக்கு-மேற்கு பகுதியை இணைக்கின்றன. இந்த சுரங்கப்பாதை வழித்தடம் மொத்தம் 16 கி.மீ தூரம் கொண்டது ஆகும். இந்த சுரங்கப்பாதை வழித்தடம் ஆனது தண்ணீருக்கு அடியில் மட்டும் 4.8 கி.மீ செல்கிறது மற்றும் எஸ்ப்ளனடே பகுதியை ஹவுரா மைதானத்தோடு இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையம் ஆனது மேற்பரப்பில் இருந்து 33 மீட்டர் அடியில் அமைந்த நாட்டின் ஆழம் வாய்ந்த மெட்ரோ ரயில் நிலையம் என்ற பெருமையை பெறுகிறது. 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த ரயில் நிலையம் ஆனது அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயங்க தொடங்கிய பிறகு ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு மெட்ரோ ரயில் ஆனது இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் சுமார் 7 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வார்கள் என கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்பரேஷன் மேலாண்மை இயக்குனர் ஸ்ரீவத்ஸா தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இந்த மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கியதும் (Metro In Underwater) அங்கு சாலை போக்குவரத்து நெரிசல் ஆனது வெகுவாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply