Metro Station At Marina Beach : இந்தியாவிலேயே முதல்முறையாக கடற்கரையில் அமைய உள்ளது

Metro Station At Marina Beach - சென்னையில் மெட்ரோ ரயில் சேவை :

இந்தியாவில் உள்ள கடற்கரைகளில் முதல் முறையாக சென்னை மெரினா கடற்கரையில் மெட்ரோ ரயில் நிலையம் (Metro Station At Marina Beach) அமைய உள்ளது. அதிலும் சுனாமி வந்தாலும் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் மெட்ரோ ரயில் நிலையம் ஆனது அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையில் பெருகி வரும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும், மக்களின் பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சென்னையில் மக்களிடையே மெட்ரோ ரயில் சேவை தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் சராசரியாக 3 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரயில் சேவை சென்னையில் தொடங்கப்பட்ட இந்த 8 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2023-ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்கள் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவையானது தற்போது இரண்டு வழித்தடங்களில் இயங்கி வருகிறது. முதற்கட்டமாக மெட்ரோ ரயில்கள்,

  • சென்னை விமான நிலையம் – விம்கோ நகர்
  • சென்ட்ரல்- பரங்கிமலை

ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்படுகின்றன.

இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ பணிகள் :

தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9KM தூரத்துக்கு 3 வழித்தடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் ஆனது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் ஆனது.

  • கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரம்
  • மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரம்
  • மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரம்

என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைய உள்ளன.

மெரினா கடற்கரையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையம் :

  • பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், மெரினா கடற்கரையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையம் (Metro Station At Marina Beach) தான் இந்தியாவின் முதல் கடற்கரை மெட்ரோ ரயில் நிலையம் ஆகும்.
  • சுனாமியை தாங்க கூடிய வகையில் நவீன வசதிகளுடன் இந்த முதல் கடற்கரை மெட்ரோ ரயில் நிலையம் ஆனது அமைக்கப்பட்டு வருகிறது.
  • 12 ரயில்களை நிறுத்தும் வசதி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்படுகிறது. 6 டிராக்குகள் 12 ரயில்களை நிறுத்தும் அளவிற்கு டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதனால் மெரினா மெட்ரோ ரயில் நிலையம் பெரியதாக இருக்கும்.
  • மெரினா மெட்ரோ ரயில் நிலையம் சுனாமி வந்தாலும் நீரில் மூழ்காது மற்றும் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
  • அதாவது, கடல் மட்டம் சுனாமி ஏற்படுகையில் உயரும் போது நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் தானியங்கி வெள்ள தடுப்பு கதவுகள் அமைக்கப்பட உள்ளதால் உள்ளே இருக்கும் மெட்ரோ நீரில் மூழ்காது என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
  • மெரினா காந்தி சிலைக்கு பின் உள்ள கடற்கரை சர்வீஸ் சாலையில் இந்த மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்திய அளவில் மிகப்பெரிய கடற்கரையாக உள்ள சென்னை மெரினா கடற்கரையில் நாள்தோறும் அதிக அளவிலான மக்கள் வந்து செல்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply