MI Won The Match Against Delhi : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி

2025 ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது அனைத்து அணிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் 2025 ஐபிஎல் போட்டியில் மும்பை அணி தற்போது வரை ஐந்து போட்டியில் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் (MI Won The Match Against Delhi) வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

டாஸ் வென்ற டெல்லி அணி

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரியான் ரிக்கல்டன் மற்றும் ரோகித் சர்மா தொடக்கம் முதலே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ரோகித் சர்மாவை அக்சர் பட்டேல் 18 ரன்னில் வெளியேற்றினார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ரியான் ரிக்கல்டனுடன் கைகோர்த்து ரன்வேகத்தை (MI Won The Match Against Delhi) குறையவிடாமல் பார்த்துக்கொண்டார். ரிக்கல்டன் 41 ரன்னில் வெளியேற அதிரடியை தொடர்ந்த சூர்யகுமார் யாதவால் 13 ஓவரில் 130 ரன்கள் கடந்த நிலையில் 40 ரன்னில் வெளியேறினார் சூர்யகுமார் யாதவ். பிறகு களத்திற்கு வந்த திலக் வர்மா சிக்சர் மழை பொழிய 20 ஓவர் முடிவில் 205 ரன்களை குவித்தது மும்பை அணி.

MI Won The Match Against Delhi - Platform Tamil

டெல்லி அணிக்கு 206 ரன்கள் இலக்கு (MI Won The Match Against Delhi)

206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த டெல்லி அணி  தீபக் சாஹர் வீசிய முதல் பந்திலேயே அதிரடி வீரர் ஜேக் ஃபிரேசர் 0 ரன்னில் வெளியேறினார். பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு (MI Won The Match Against Delhi) பிறகு ஐபிஎல் போட்டிக்கு கம்பேக் கொடுத்துள்ள கருண் நாயர் இம்பேக்ட் வீரராக களமிறங்கி ஜஸ்பிரித் பும்ராவின் இரண்டு ஓவரில் 29 ரன்களை பறக்கவிட்டார். 

கடைசி வரை கருண் நாயரை மும்பை இந்தியன்ஸ் அணியால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கடைசியில் மும்பை அணிக்காக இதுவரை 5 கோப்பைகளை வென்ற முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி இம்பேக்ட் வீரரான கரண் சர்மாவிற்கு ஓவர் வழங்கினார். அவர் மறுமுனையில் இருந்த (MI Won The Match Against Delhi) அபிஷேக் போரலை வெளியேற்றியதால் 119 ரன்னுக்கு பிறகு டெல்லி அணியில் 2 வது விக்கெட் விழுந்தது. அடுத்தடுத்து விக்கெட் விழுந்த நிலையில் அதிரடியை நிறுத்தாத கருண் நாயர் 89 ரன்னில் மிட்செல் சாண்ட்னர் ஓவரில் போல்டாகி வெளியேறினார்.

3 பந்தில் 3 ரன்அவுட்

144 ரன்னுக்கு 4 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் களத்தில் நட்சத்திர வீரர் கேஎல் ராகுலும், அதிரடி வீரர் ஸ்டப்ஸும் இருந்தனர். அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுலலை 15 ரன்னிலும், ஸ்டப்ஸை 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றி மும்பை அணியை மீண்டும் (MI Won The Match Against Delhi) ஆட்டத்திற்குள் எடுத்து வந்தார் கரண் சர்மா. டெல்லி அணி வெற்றிபெற கடைசி நான்கு ஓவரில் 42 ரன்கள் தேவை என்ற நிலையில் அஷுதோஷ் சர்மா மற்றும் விப்ரஜ் நிகம் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 17 வது ஓவரை வீசிய டிரெண்ட் போல்ட் 3 ரன்களை மட்டுமே கொடுத்து டெல்லி அணிக்கு அழுத்தம் கொடுத்தார். 

கடைசி 12 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்ற நிலைக்கு போட்டி செல்ல பும்ரா வீசிய 19 வது ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டினார் அஷுதோஷ் சர்மா. மூன்றாவது பந்தை பும்ரா சிறப்பாக வீச அஷுதோஷ் சர்மா ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களத்திற்கு வந்த குல்தீப் யாதவும் ரன்அவுட் ஆகியதால் இரண்டு பந்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது. 19 வது ஓவரின் கடைசி பந்தில் விப்ரஜ் நிகம் ரன்அவுட்டாக 3 பந்தில் 3 ரன்அவுட்களை பறிகொடுத்த டெல்லி அணி (MI Won The Match Against Delhi) தோல்வியை தழுவியது. கடைசியில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

Latest Slideshows

Leave a Reply