Michaung Cyclone : ரூ.5060 கோடி நிவாரணம் வழங்கிட பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Michaung Cyclone :

மிக்ஜாம் புயலால் (Michaung Cyclone) ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய இடைக்கால நிவாரணம் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே உள்ள பாபட்லா என்னும் இடத்தில் கரையைக் கடந்தது. இந்தப் புயலால் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 3ம் தேதி இரவு முதல் 4ம் தேதி வரை 24 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக சென்னையின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் பலர் உணவு, இருப்பிடம் இன்றி அவதிப்பட்டனர். குறிப்பாக, வீடுகளை விட்டு வெளியே கூட வர முடியாமல் முடங்கி கிடந்த மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.

முதல்வர் ஸ்டாலின் கடிதம் :

இந்நிலையில், மிக்ஜாம் புயலால் (Michaung Cyclone) ஏற்பட்ட வெள்ள சேதங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைநீர் தேங்குவதற்கான காரணங்கள், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்ட பல தகவல்களை தெரிவித்தார். இந்நிலையில் வெள்ள சேதத்தை சீரமைக்க இழப்பீடு கோரி பிரதமர் மோடிக்கு செயல்தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,  தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளதால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக் கோரி மாண்புமிகு இந்திய பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (டிசம்பர் 5) கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயலால் வரலாறு காணாத கனமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. இதனால் இந்த நான்கு மாவட்டங்கள் குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் விரிவாகக் குறிப்பிட்டு தமிழகத்திற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ.5,060 கோடியை உடனடியாக வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்திய பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களைக் கேட்டு கொண்டார்.

மேலும், ‘மிக்ஜாம்’ புயலால் (Michaung Cyclone) பெய்த கனமழையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply