Microsoft Introduced Majorana 1 Chip : மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய Majorana 1 என்ற சிப்பை அறிமுகம் செய்துள்ளது

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக Microsoft Introduced Majorana 1 Chip என்ற புதிய சிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Quantum Computing துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. Quantum Computing சார்ந்த ஆய்வுகள் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. இதற்கிடையே Quantum Computing-ங்கின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக குவாண்டம் சிப் மஜோரானா 1 என்ற புதிய சிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

Microsoft Introduced Majorana 1 Chip

Microsoft நிறுவனம் புதிதாக Quantum Chip ‘Majorana 1’ என்ற புதிய Chip-ன் சிறப்பான பண்புகள் காரணமாக, இந்தத் துகள் தற்போதுள்ள Quantum கம்ப்யூட்டர்களில் ஏற்படும் தவறுகளைக் குறைக்க உதவுகிறது. அதிசக்திவாய்ந்த இந்த (Microsoft Introduced Majorana 1 Chip) என்ற புதிய Chip-பை கடவுள் சிப் என்றும் கூட அழைக்கிறார்கள்.

Microsoft நிறுவனத்தின் CEO சத்யா நாதெல்லா தனது ட்விட்டர் உரை

Microsoft Introduced Majorana 1 Chip - Platform Tamil

Microsoft நிறுவனத்தின் CEO சத்யா நாதெல்லா தனது ட்விட்டரில் இதுவரை நமக்குத் திடப் பொருட்கள், திரவம் மற்றும் வாயு என மூன்று வகையான பொருட்கள் மட்டுமே இருப்பது தெரியும். ஆனால், இப்போது அந்த நிலை மாறி உள்ளது. இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட டோபோலொஜிக்கல் கோர் (Microsoft Introduced Majorana 1 Chip) என்ற ஒரு பொருளைப் பயன்படுத்தி இந்த சிப் உருவாக்கப்பட்டுள்ளது. டோபோலொஜிக்கல் கோர் (Topological Core) அடிப்படையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் குவாண்டம் பிராசஸிங் யூனிட்டான இது தற்போதைய மாடல்களை விட வேகமாகவும் அளவில் சிறியதாகவும் இருக்கும். இது குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.

சத்யா நாதெல்லா மேலும் கூறுகையில், ஆய்வாளர்கள் Quantum Computing அதன் முழு திறனை அடைய ஒரே சிப்பில் குறைந்தது ஒரு மில்லியன் குவிட்கள் அமைக்க வேண்டும். Microsoft ‘Majorana 1’ அதற்கு முதல் படியாக இருக்கும். டோபோகண்டக்டர்கள் மூலம் உருவாக்கப்பட்ட குவிட்கள் ஆனது வேகமானவை. ஒரு மில்லிமீட்டரில் 1/100 என்ற சைஸில் அவை உள்ளது. இதனால் ஒரு சிப்பில் ஈஸியாக ஒரு மில்லியன் குவிட்களை வைக்க முடியும். திட்டமிட்டபடி Quantum Computing வெற்றிகரமாக இருந்தால் அது தற்போது உலகில் உள்ள அனைத்து கணினிகளையும் விஞ்சும் (Microsoft Introduced Majorana 1 Chip) அளவுக்குச் சக்திவாய்ந்ததாக அமையும். அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நன்றாக இது உதவும் என்று பதிவிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply