Mijain Lopez won gold 5 times in a row : தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்ற கியூபா வீரர்

கியூபா வீரர் ஜாம்பவான் Mijain Lopez தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்று உலக சாதனை :

128 வருட ஒலிம்பிக் வரலாற்றில் ஒலிம்பிக்கில் 5 முறை தங்கம் வெல்வதும் மற்றும் தொடர்ச்சியாக 5 தங்கம் ஆனது வெல்லப்படுவதும் இதுவே முதல்முறை ஆகும். தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்ற (Mijain Lopez won gold 5 times in a row) முதல் வீரராக 41 வயது கியூபாவின் மல்யுத்த ஜாம்பவானான Mijain Lopez புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

Mijain Lopez-ன் உலக சாதனைகள் :

அமெரிக்காவின் மைக்கேல் ஃபெல்ப்ஸ் (நீச்சல்), கார்ல் லூயிஸ் (நீளம் தாண்டுதல்), ஆல்ஃபிரட் ஓர்டர் (வட்டு எறிதல்) மற்றும் டென்மார்க்கின் பால் எல்வ்ஸ்ட்ரோம் (படகோட்டம்) போன்ற ஒலிம்பிக் வரலாற்றில் அதிகப்படியாக 4 தனிநபர் தங்கங்களை வென்றிருந்த வீரர்களின் பட்டியலில் கியூபாவின் மல்யுத்த வீரர் Mijain Lopez வீரரும் இடம் பெற்றிருந்தார். தற்போது 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 130 கிலோ எடைப்பிரிவு கிரேக்க-ரோமன் இறுதிப்போட்டியில் கியூபா ஜாம்பவான் Mijain Lopez தான் சொன்னதைப் போலவே சிலி வீரர் யாஸ்மானி அகோஸ்டாவை 6-0 என தோற்கடித்து தங்கம் வென்றார். கியூபாவின் Mijain Lopez 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரேக்க-ரோமன் மல்யுத்தத்தில் பங்கேற்று விளையாடி தன்னுடைய 5வது தங்கத்தை வென்று புதிய சாதனையை (Mijain Lopez won gold 5 times in a row) பெற்றுள்ளார். Mijain Lopez-ஸின் 5 தங்கங்கள் பற்றிய விவரங்கள்,

  • 2008 – பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் – தங்கம்
  • 2012 – லண்டன் ஒலிம்பிக்ஸ் – தங்கம்
  • 2016 – ரியோ ஒலிம்பிக்ஸ் – தங்கம்
  • 2020 – டோக்கியோ ஒலிம்பிக்ஸ் – தங்கம்
  • 2024 – பாரீஸ் ஒலிம்பிக்ஸ் – தங்கம்

“என் விளையாட்டு வாழ்க்கையை ஐந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற முதல் மல்யுத்த வீரராக முடிக்க விரும்புகிறேன்” என்று யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தம் பத்திரிக்கையாளரிடம் சொன்னதை போலவே 5வது தங்கம் வென்று வரலாறு படைத்து 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் தன்னுடைய வாழ்க்கையை உயரடுக்கில் முடிக்க முடிவு செய்துள்ளார். போட்டிக்கு பிறகு தங்கம் வென்ற மேடையிலேயே தன்னுடைய ஷூவை கழற்றி மேடையில் வைத்து Mijain Lopez  தன்னுடைய அதிகாரப்பூர்வ ஓய்வை அறிவித்தார்.

Mijain Lopez won gold 5 times in a row - Mijain Lopez தனது வெற்றி குறித்து மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் :

Mijain Lopez தனது வெற்றி குறித்து, “எனக்கு சொல்லமுடியாத பெரிய மகிழ்ச்சி ஆனது கிடைத்துள்ளது. என் வாழ்க்கையில் இதைத்தான் நான் செய்து முடிக்க இத்தனை நாளாக ஏங்கிக் கொண்டிருந்தேன். நான் எனது நாட்டிற்காகவும் மற்றும் ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஒலிம்பிக்கில் ஒரு உயரடுக்கில் முடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இன்று இவ்வளவு வருடம் என் குடும்பத்தினருடன் சேர்ந்து கடினமாக உழைத்ததற்கு ஒரு வாழ்நாள் வெகுமதி ஆனது கிடைத்துள்ளது. இது ஒரு மிகப்பெரிய வெற்றி ஆகும்” என்று தனது மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

Latest Slideshows

Leave a Reply