Milad Un Nabi 2024 : மிலாடி நபியின் கொண்டாட்டமும் முக்கியத்துவமும்

மிலாடி நபி இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் (Milad Un Nabi 2024) ஒன்றாகும். இது மீலாதுன் நபி, மிலாத் நபி என பல பெயர்களால் கூறப்படுகிறது. தொடக்கத்தில் எகிப்தில் அதிகாரப்பூர்வ விழாவாகக் கொண்டாடப்பட்ட இந்த விழா பின்னர் படிப்படியாக பிரபலமடைந்து உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாக மாறியது. துருக்கி, ஸ்பெயின் மற்றும் சிரியாவைச் சேர்ந்த மக்கள் 12 ஆம் நூற்றாண்டில் இந்தப் பண்டிகையைக் கொண்டாடத் தொடங்கினர். பின்னர் சன்னி முஸ்லிம்களும் இந்த நாளைக் கொண்டாடத் தொடங்கினர்.

Milad Un Nabi 2024 :

மிலாடி நபி இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றாகும். இத்திருவிழா ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இறை தூதரான முஹம்மது நபியின் பிறந்த நாளையே மிலாடி நபி என்று கொண்டாடுகிறோம். முஹம்மது நபி மக்கா நகரில் கி.பி 570 இல் ரபி உல் அவ்வல் மாதம் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12 வது நாளில் தோன்றினார். இந்த நாளை மிலாடி நபி என்று கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு மிலாடி நபி விழா செப்டம்பர் 17 ஆம் தேதி (Milad Un Nabi 2024) கொண்டாடப்பட உள்ளது.

மிலாடி நபியின் முக்கியத்துவம் :

நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன்னரே அவரது தந்தை இறந்துவிட்டார். தாயாரும் நபிகளாரின் 6 ஆம் அகவையில் காலமானார். பின்னர் முஹம்மது அவர்களின் தாத்தாவால் வளர்க்கப்பட்டார். அடுத்த சில வருடங்களில் அவரும் இறந்து போனதால், சிறிய தந்தை முஹம்மது நபியைத் தழுவிக் கொண்டிருந்தார். முஹம்மது நபி அவர்கள் சிறு வயதிலேயே மற்றவர்களிடம் நம்பிக்கையை விதைத்தார். வாழ்க்கையில் ஒழுக்கத்தையும் உண்மையையும் பின்பற்ற விரும்பும் மக்கள் முஹம்மது நபியை கடவுளாக வணங்கினர். நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாடி நபியாகக் (Milad Un Nabi 2024) கொண்டாடுகிறோம்.

கோலாகலமாக கொண்டாடப்படும் மிலாடி நபி :

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளும் பிறை (நிலவு) தரிசனத்திற்கு ஏற்ப இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய பண்டிகைகள் முஹம்மது நபிகளின் பிறப்பு மற்றும் நினைவு நாட்களை ஒட்டியே இஸ்லாமிய பண்டிகைகள் வருகின்றன. முஹம்மது நபி கிபி 570 வது ஆண்டு பிறந்தார்.  அதாவது ரபி உல் அவ்வல் மாதத்தின் 12 ஆம் தேதி பிறந்தார் என்று அர்த்தம். இது இஸ்லாமிய தேசத்தின் முக்கிய கொண்டாட்டமாக அனுசரிக்கப்படுகிறது. மிலாடி நபி நன்றியை செலுத்தும் தினமாக குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் நாளாகவும் இது கருதப்படுகிறது. இந்த நாளில் மக்கள் கோயில்கள், மசூதிகள் மற்றும் தர்காக்களுக்குச் செல்கிறார்கள்.

இந்நாளில், முஹம்மது நபியின் போதனைகளைப் போற்றும் வகையில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை வாசிப்பது இஸ்லாமியர்கள் முக்கிய கடமையாக வைத்துள்ளனர். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்நாளில் நோன்பு நோற்கிறார்கள். ஏழை மக்களுக்கு உணவு, உடை போன்றவற்றை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நாளில் நண்பர்கள், உறவினர்களை அழைத்துப் பரிசுகள் வழங்குவதும், வீடுகளுக்குச் சென்று வாழ்த்துப் பரிமாறிக் கொள்வதும், ஒன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதும் வழக்கம். சன்னி முஸ்லிம்கள் மிலாடி நபியை ரபி உல் அவ்வலின் 12 வது நாளில் கொண்டாடுகிறார்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள் 17 வது நாளில் கொண்டாடுகிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply