Military Training For Pakistan Players : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி

லாகூர் :

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்படும் (Military Training For Pakistan Players) என அந்நாட்டு கிரிக்கெட் அமைப்பின் தலைவர் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 2023 ஆசியக் கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததில் இருந்தே, அணியின் சிக்கல்கள் தொடங்கியுள்ளன. அணியின் பயிற்சியாளர்கள் முற்றிலும் மாற்றப்பட்டனர். தேர்வுக்குழு, அணி இயக்குனர், கேப்டன் என அனைவரையும் மாற்றி அணி வெற்றி பாதைக்கு திரும்பவில்லை. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக அந்நாட்டு அரசியல்வாதி நக்வி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிக்ஸர் அடிப்பதில்லை. பாகிஸ்தான் மைதானத்தில் எங்காவது சிக்ஸர் அடிக்கப்பட்டால், அதை வெளிநாட்டு வீரர்கள் தான் அடிப்பார்கள்” என்று நினைக்கிறேன்.

Military Training For Pakistan Players :

மேலும், “பாகிஸ்தான் வீரர்கள் சிக்ஸர் அடிக்கும் அளவுக்கு கூட பலம் இல்லாதவர்கள். விரைவில் உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்ளுமாறு கிரிக்கெட் அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. அடுத்த டி20 உலக கோப்பை விரைவில் வர உள்ளது. இதனால் இன்னும் குறுகிய காலமே உள்ளதால் விரைவாக பயிற்சியை தொடங்க வேண்டும்” என்று கூறினார். மேலும், “எங்களுக்கு குறுகிய கால அவகாசம் உள்ளது. மார்ச் 25 முதல் ஏப்ரல் 8 வரை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் காகுல் ராணுவ முகாமில் பயிற்சி பெற உள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் அவர்களின் பயிற்சிக்கு (Military Training For Pakistan Players) உதவ உள்ளது. இது அவர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்” என்று கூறினார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கிரிக்கெட் அணி சரியாக விளையாடாததால் ராணுவ முகாமுக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்டதாக தெரியவில்லை.

Latest Slideshows

Leave a Reply