வானில் 'Mini Moon' நவம்பர் 25-ம் தேதி வரை பார்க்கலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

30.09.2024 அன்று முதல் வரும் நவம்பர் மாதம் 25-ம் தேதி வரை வானத்தில் மினி நிலா (Mini moon) என்ற விண்கல் தெரியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாம் ஏற்கனவே வானில் தினமும் ஒரு நிலாவை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இன்னொரு நிலவை பார்க்க முடியும் என இஸ்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர். நாம் வாழும் இந்த பூமியானது பல அதிசயங்கள் நிறைந்தது. பால்வெளி அண்டம், சூரியன், பூமி, கேலக்ஸி என கற்பனைக்கு எட்ட முடியாத அளவுக்கு பல்வேறு அதிசயங்கள் உள்ளன. நம் பூமியை போல் மற்ற கோள்களிலும் மனித உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான சாத்தியக்கூறுகள் உள்ளதா என அறிவியல் ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.         

நிலவு, சூரியன் குறித்த ஆய்வுகளை இஸ்ரோ சமீப காலமாக செய்து வருகிறது. சூரியனை சுற்றி வருவது கோள்கள் எனவும் இந்த கோளை சுற்றி வருவது துணைக்கோள் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் பூமிக்கு ஒரே ஒரு துணைக்கோள் மட்டுமே உள்ளது அது நிலவாகும். ஆனால் பூமிக்கு மிக அருகே தற்போது ஒரு விண்கல் வருகிறது. இந்த விண்கல்லை மினி நிலா (Mini moon) என்று அழைக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியின் துணைக்கோளான நிலாவை போல் ஒளி வீசும் தன்மையுள்ள இந்த விண்கல்லானது பூமிக்கு மிக அருகே வருவதால் இதனை மினி நிலா என்று அழைக்கின்றனர். மேலும் சூரிய ஒளி இந்த விண்கல் மீது விழுந்து பூமியை நோக்கி திரும்பும்போது வானில் இன்னொரு நிலா இருப்பது தெரியும்.

தொலைநோக்கியின் மூலம் பார்க்கலாம் :

இந்த மினி நிலா (Mini moon) அளவில் மிக சிறியதாக இருப்பதால் தொலைநோக்கியின் மூலம் மட்டுமே பார்க்க முடியும் எனவும் நம் வெறும் கண்களால் பார்க்க முடியாது என இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் டெலஸ்கோப் அல்லது பைனாகுலர்ஸ் மூலம் இந்த நிலவை பார்க்க முடியும்.    

Mini Moon-னை நவம்பர் 25-ம் தேதி வரை பார்க்கலாம் :

நம் நிலாவை விட இந்த மினி நிலா (Mini moon) 1,73,700 மடங்கு அளவில் சிறியது ஆகும். மேலும் மினி நிலாவை இன்று முதல் வரும் நவம்பர் மாதம் 25-ம் தேதி வரை பார்க்க முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply