Mint Leaves Benefits in Tamil: புதினாவின் மருத்துவ பயன்கள்

புதினா என்றதுமே இது உணவில் மனம் சேர்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்பது தான் அதிக மக்களுக்கு தெரியும். இதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை யாரும் அறிவதில்லை. ஆனால் இதில் அனைவரும் அசந்து போகும் அளவிற்கு நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த புதினா இலைகளில் 4 அல்லது 5 இலைகளை எடுத்து பச்சையாகவும் சாப்பிடலாம். அதன் சுவை வித்தியாசமாகவும் வாய் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இந்த புதினா இலைகளில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது புரோட்டீன், நீர்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, அயன், நிகோடின் ஆசிட், தயாமின், ரிபோப்ளேமின் போன்ற சத்துக்கள் இதில் அதிகம் நிறைந்துள்ளது.

புதினா இலைகளை ஜூஸ், துவையல் என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் அதன் மருத்துவகுணங்கள் குறையாமல் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். என்பதே இதன் சிறப்பம்சம். இந்தவகையில் நம்முடைய எந்தெந்த பிரட்சனைகளுக்கு புதினாவை எப்படி பயன்படுத்துவது மற்றும் இதன் மருத்துவ நன்மைகள் என்ன என்பதை இப்பதிவில் காணலாம். 

Mint Leaves Benefits in Tamil List

வயிறு சம்மந்தமான பிரட்சனைகள்

செரிமான பிரட்சனை, வாயுத்தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல், வயிறு உப்பசம் போன்ற பல பிரட்சனைகளுக்கு புதினா ஒரு அருப்புத மருந்தாகும். இந்த பிரட்சனை உள்ளவர்கள் புதினா இலைகளை மென்றும் சாப்பிடலாம், துவயலாகவும் செய்து சாப்பிடலாம். இதனால் நல்ல பயன் கிடைக்கும். அதே போன்று புதினாவின் சாறு எடுத்து அருந்தினால் செரிமான பிரட்சனைகள் நீங்கி நன்கு பசி எடுக்கும். வயிறு சம்பந்தமான பிரட்சனைகள் அனைத்தும் நீங்கும். இந்த புதினா சாறுடன் எலுமிச்சை சாறை கலந்தும் குடிக்கலாம்.

பற்களின் ஆரோக்கியம்

புதினாவை மென்று சாப்பிடும்போது நம் பற்களின் ஆரோக்கியமாக இருக்கும். பல் ஈறுகளும் பலம் பெரும் அதுமட்டுமில்லாமல் பற்சிதைவு மற்றும் ஈறுகளில் இரதம் வடிதல் போன்ற பல் தொடர்பான எந்த நோயாக இருந்தாலும் குணமாகும். பொதுவாக புதினா இலைகளை மென்று சாப்பிட்டு வரும்போது வாய் சம்பந்தமான பிரட்சனைகள் வராமல் தடுக்கலாம். மேலும் பல் மற்றும் ஈறுகளில் தங்கியுள்ள கிருமிகளை இதிலுள்ள வேதிய பொருட்கள் முற்றிலும் அழித்து பற்கள் மற்றும் ஈறுகளை பலப்படுத்துகிறது. புதினா இலைகளை நன்கு உலர்த்தி தூள் செய்து வைத்துக்கொண்டு தினமும் பல் துலக்கி வந்தால் இதனால் பல், ஈறு ஆரோக்கியமாக இருக்கும். இதனால் பல் துலக்கும் பேஸ்டுகள் தயாரிப்பில் புதினா அதிகம் பயன்படுகிறது. வாய் துறுநாற்றம் உள்ளவர்கள் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டால் வாய் துறுநாற்றம் நீங்கும். அதே போன்று நாக்கில் சுவையே தெரியவில்லை என்பவர்கள் இந்த புதினாவை மென்று சாப்பிட்டு வரும்போது நாக்கில் உள்ள சுவை நரம்புகள் மீண்டும் சக்தி பெற்று எல்லா உணவுகளையும் ருசித்து சாப்பிட முடியும்.

முடி உதிர்வு பிரட்சனை

முடி கொட்டும் பிரட்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு 15 புதினா இலைகளை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவது நின்று அடர்த்தியாக வளரும். காரணம் இதில் இரும்பு சத்து அதிகமாக இருப்பது மட்டுமின்றி முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. பொடுகு தொல்லை இருந்தால் புதினா சாறுடன், எலுமிச்சை மற்றும் பூண்டு சாறு இந்த மூன்று சாறையும் கலந்து தலையில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு முற்றிலும் மறைந்துவிடும்.   

இரத்த சோகை

இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் 10 புதினா இலையை மென்று சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து இரத்த சோகை நீங்கும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். முக்கியமாக புதினாவில் மென்தால்  இருப்பதால் தசையை தளர்த்தி வலியை குறைக்க உதவுகிறது. அதே போன்று வயிற்றில் புழுக்கள் இருந்தாலும் அழித்து வெளியேற்றிவிடும்.

சளி நீங்குதல்

நீண்ட நாள் சளி உள்ளவர்கள் தொடர்ந்து புதினாவை எடுத்து கொண்டு வந்தால் நுரையீரலில் தங்கியுள்ள சளியை வெளியேற்றும். அதே போன்று தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் உள்ள அடைப்புகளை  நீக்கி சீரான சுவாசம் கிடைக்கும்படி செய்கிறது. ஆஸ்துமா நோயாளிகள் புதினாவை தொடர்ந்து எடுத்துவந்தால் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

புதினா இலைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து டீ க்கு பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மூளையின் செயல் பாட்டையும் அதிகரிக்கும். தினமும் காலை, மாலை காபி, டீ க்கு பதிலாக புதினா தூளை பயன்படுத்தி டீ தயாரித்து அருந்தினால் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். மாத விடாய் தாமதம் ஆகும் பெண்கள் ஒரு டீஸ்பூன் புதினா பொடியை தேனில் கலந்து தினமும் இரண்டு வேலை என்று நான்கு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சரியாக வரும்.

சரும பிரட்சனை

சரும பிரட்சனைகளை போக்க புதினா பயன்படுகிறது. சருமத்தில் புண்கள், அரிப்பு இருந்தால் புதினா சாற்றை தடவினால் அரிப்பு, புண்கள் குணமாகும். அதே போன்று முகப்பரு மற்றும் முக பருட்களால் ஏற்படும் கரும்புள்ளி, தழும்புகள் மறைய புதினா சாற்றை தடவலாம். மேலும் கொசுக்கடி, வண்டு கடி மற்றும் பூச்சுக் கடிகளால் ஏற்பட்ட வீக்கம், எரிச்சல் இவற்றிற்கும் புதினா சாறை தடவினால் எரிச்சல் குறைந்து பூச்சிக்கடி விஷங்கள் உடலில் இருந்து நீங்கும்.

நச்சுக்களை வெளியேற்றுதல்

கோடைக்காலங்களில் ஏற்படும் உடல் சூட்டை சமாளிக்க புதினாவை ஜூஸ் செய்து குடித்தால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும். மது, சிகரெட், புகையிலை போன்ற பழக்கங்கள் உள்ளவர்களின் உடலில் இரதம் மற்றும் பிற உறுப்புகளில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்திருக்கும் இந்த நச்சுக்களை வெளியேற்று உடலை தூய்மை செய்ய தினமும் ஒரு 10 புதினா இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் நச்சுக்கள் அனைத்தும் வேர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.   

புதினாவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் பித்தம் குறையும். உடலில் உள்ள கொழுப்புகளை இது குறைப்பதால் உடல் எடையும் குறையும். முக்யமாக இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கர்ப்பிணி பெண்கள் குமட்டல் மற்றும் வாந்தி வருவதை தடுக்க புதினாவை துவையல் செய்து சாப்பிடலாம். எனவே புதினாவை சட்னி, ஜூஸ், டீ, கஷாயம், சூப் என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இவ்வாறாக புதினாவை தொடர்ந்து அடிக்கடி உணவில் சேர்த்து வர 300 க்கும் மேற்பட்ட நோய்கள் குணமாகும். 

Latest Slideshows

Leave a Reply