Miss World 2025 : உலக அழகி பட்டத்தை தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ வென்றுள்ளார்

உலக அழகி போட்டி ஹைதராபாத்தில் உள்ள HITEX கண்காட்சி மையத்தில் நடைபெற்றது. 120 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர். கடந்த மே 10-ம் தேதி தொடங்கிய இந்த போட்டி மே 31-ம் தேதி நிறைவு பெற்றது. இந்த போட்டியில் 72வது மிஸ் வேர்ல்டாக தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ (Miss World 2025) வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற தாய்லாந்தின் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற சுவாங்ஸ்ரீக்கு ரூ.8.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

Miss World 2025 - Platform Tamil

உலக அழகி போட்டி (Miss World 2025)

உலக அழகி இறுதிப்போட்டியில் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ தனது போட்டியாளர்களான மார்டினிக், எத்தியோப்பியா மற்றும் போலந்து நாடுகளைச் சேர்ந்த அழகிகளை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார். எத்தியோப்பியாவை சேர்ந்த ஹசேட் டெரேஜே அட்மாசு இந்த போட்டியில் இரண்டாவது இடத்தையும், போலந்தை சேர்ந்த மாஜா கிளாஜ்டா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். வெற்றியாளருக்கு கடந்த 2024 ஆண்டு மும்பையில் நடைபெற்ற 71வது உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா முடிசூட்டினார்.

தாய்லாந்தில் 2003-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி ஒரு ஹோட்டல் உரிமையாளர்களின் மகளாக ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ பிறந்தார். இவர் தாய், ஆங்கிலம் மற்றும் சீனம் என இரண்டு மொழிகளில் பேசும் வல்லமை பெற்றவர். இவர் பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற ட்ரைம் உடோம் சுக்ஸா பள்ளியில் தனது கல்விப் பயணத்தை தொடங்கினார். தற்போது ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ தம்மசாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளில் இளங்கலைப் படித்து வருகிறார். இவர் சமூகப் பணிகளிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுகிறார். இவர் தனது 16 வயதில் தீங்கற்ற மார்பகக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டார். பெண்களுக்கு மார்பக ஆரோக்கிய விழிப்புணர்வு மற்றும் புற்றுநோயை ஆரம்பகாலத்திலேயே கண்டறியும் விழிப்புணர்வு ஏற்படுத்த “ஓபல் ஃபார் ஹர்” (Opal For Her) பிரச்சாரத்தைத் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ தொடங்கினார். இவரது இந்த ஈடுபாடு பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மேம்பாட்டிற்கான அவரது ஈடுபாட்டைக் காட்டுகிறது. இந்த நிகழ்வில் இந்தி நடிகர் சோனு சூட்டு அவரது மனிதநேய பணிகளுக்காக மிஸ் வேர்ல்ட் மனிதாபிமான விருது பெற்றார்.

Latest Slideshows

Leave a Reply