Miss You Teaser : சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியீடு

சித்தா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சித்தார்த் ‘மிஸ் யூ’ என்ற காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இப்படத்தின் டீசர் (Miss You Teaser) வெளியாகியுள்ளது.

சித்தார்த்

நடிகர் சித்தார்த் வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்தாலும், இந்த படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்ப்பதில் தவறவிடுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான சித்தா திரைப்படம் விதிவிலக்காக இருந்தது. சித்தார்த்தின் கேரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாக சித்தா திரைப்படம் அமைந்தது. இந்த நிலையில், சித்தார்த் தற்போது நடித்துள்ள மிஸ் யூ படத்தின் டீசர் (Miss You Teaser) வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

மிஸ் யூ

இயக்குநர் என்.ராஜசேகர் இயக்கியுள்ள படம் ‘மிஸ் யூ’ இந்த படத்தில் பிரபல கன்னட மற்றும் தெலுங்கு நடிகை ஆஷிகா ரங்கநாத் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் காதல், காமெடி, ஆக்‌ஷன் என முழு நீள பொழுதுபோக்கு படமாக தயாராகியுள்ளது. தமிழ்நாட்டில் பிராண்டிங் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் முன்னோடியாகத் திகழும் ‘7 மைல்ஸ் பர் செகண்ட்’ சார்பில் சாமுவேல் மேத்யூ இந்தப் படத்தைத் (Miss You Teaser) தயாரிக்கிறார். பொன்வண்ணன், நரேன், ரமா, ஜே.பி, பாலசரவணன், லொள்ளு சபா மாறன், சாஸ்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், படத்தில் நாயகன், நாயகி மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் அனைத்து நடிகர்களுக்கும் நகைச்சுவை மற்றும் முக்கியத்துவத்துடன் விறுவிறுப்பாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பின்னணி இசையில் பெயர் பெற்ற ஜிப்ரான் படத்தின் பாடல்களுக்காக எட்டு பாடல்களை வழங்கியுள்ளார். பேப்பர் ராக்கெட், களத்தில் சந்திப்போம் போன்ற திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களுக்கு வசனம் எழுதிய அசோக் படத்தின் வசனங்களையும், திரைக்கதையையும் இயக்குநருடன் இணைந்து எழுதியுள்ளார். இப்படம் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Miss You Teaser

மிஸ் யூ படத்தின் டீசர் பல வருடங்களாக சலிப்பாக இருக்கும் டெம்ப்ளேட் காதல் கதை போல் தெரிகிறது. பெண்ணைக் கண்டால் காதலிக்கும் ஆணின் உன்னதமான காதல் கதை, காதலில் விழும் பிரச்சனை ஆண்களின் பாவம் என்ற பாணியில் பாடல். இன்றைய சூழலில் இளம் இயக்குநர்கள் எல்லா வகையிலும் புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மிஸ் யூ படத்தின் டீசர் (Miss You Teaser) ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply